முதலில் இளநீரை வெட்டி, அதிலுள்ள தண்ணீரை தனியே எடுத்துக் கொள்ளவும். பிறகு இளநீரின் சதையை எடுத்து இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
நுங்கின் தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து பின்னர் குளிர வைக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள இளநீர் கலவையுடன், குளிர்ந்த பாலை சேர்க்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளற வேண்டும். ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை பாயாசத்தில் சேர்த்து கலக்கவும். இப்போது சுவையான இளநீர் நுங்கு பாயாசம் தயார்.
இதை ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர வைத்து பரிமாறினால், கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.