உணவுகளை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? எந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது?

First Published | Jan 28, 2023, 11:57 AM IST

ரொம்ப பிஸியான நாட்களில், மீந்து போகும் உணவை மீண்டும் சூடாக்கி உண்பது நேரத்தை மிச்சமாக்கும். ஆனால் சில உணவுகள் சூடுபடுத்தும் போது விஷமாக மாறும். 

Image: Getty Images

ரொம்ப வேலைகள் இருக்கும் நாட்களில், முந்தைய நாள் எஞ்சியவை தான் உணவு மேசையை நிரப்பும். புதிய உணவுகள் சமைக்க நேரம் இருக்காது. ஆனால் எஞ்சிய உணவுகளை மறுநாள் உண்பது தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆய்வுகளின்படி, சில உணவு பொருட்கள், மீண்டும் சூடுபடுத்தும் போது, ​​தீங்கு விளைவிக்கும் விதமான கலவைகளாக உருமாறுகின்றன. அதாவது அந்த உணவில் உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் சில சேர்மங்கள் செயல்படத் தொடங்குகின்றன. அப்படிப்பட்ட உணவுகளை இங்கு காணலாம். 

முட்டை 

நம் ஆரோக்கியத்திற்கு முட்டை மிகவும் நல்லது. ஆனால் அவை எப்போதும் சால்மோனெல்லா எனும் பாக்டீரியாவை கொண்டிருக்கின்றன. முட்டைகளை சமைக்கப் பயன்படுத்தப்படும் போது மிதமான வெப்பம் பாக்டீரியாவைக் கொல்லத் தவறிவிடுகிறது. அவற்றை தாமதமாக உட்கொண்டால், அவை சில சேதங்களை ஏற்படுத்தக்கூடும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

Tap to resize

பீட்ரூட் 

உங்களுக்கு தெரியுமா? பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்சைடு நிறைந்துள்ளது. இந்த ஆக்சைடு நிறைந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தும்போது, ​​அவை நைட்ரைட்டுகளாகவும் பின்னர் நைட்ரோசமைன்களாகவும் மாற்றப்படுகின்றன. அவற்றில் சில புற்றுநோயாக அறியப்படுகின்றன. எனவே பீட்ரூட் சேர்க்கப்பட்ட எந்த உணவுப் பொருளையும் மீண்டும் சூடுபடுத்த வேண்டாம். 

பசலைக் கீரை 

இந்த கீரையில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே அதை மீண்டும் சூடுபடுத்தும் போது, ​​அது புற்றுநோயை உண்டாக்கும் நைட்ரோசமைனாக மாறி உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 

இதையும் படிங்க: சனிக்கிழமை இந்த பொருளை வாங்கினால் கூடவே துரதிர்ஷ்டம் வீட்டுக்கு வருமாம்.. ஏன் அப்படி ஆகுது தெரியுமா?

சிக்கன் 

முட்டைகளைப் போலவே, கோழியிலும் சால்மோனெல்லா உள்ளது. இதனை மீண்டும் சூடுபடுத்தும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே சிக்கன் பிரியாணி, சிக்கன் சுக்காவை மீண்டும் சூடுபடுத்தாதீர்கள். 

எண்ணெய்கள் 

ஆளிவிதை, ஆலிவ் எண்ணெய் போன்ற குளிர் அழுத்தப்பட்ட எண்ணெய்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவை மீண்டும் சூடுபடுத்தப்படும் போது, ​​அவை நிலையற்றதாக மாறும். எனவே அவை பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. 

ஜங்க் புட் வகைகளான பீட்சா, பர்கர் ஆகியவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. இதில் சேர்க்கப்பட்டுள்ள கிரீம்கள் நச்சுத்தன்மையுடையதாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை எக்காரணம் கொண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்ணாதீர்கள். 

இதையும் படிங்க: எக்காரணம் கொண்டும் வீட்டின் இந்த திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.. மீறி வைத்தால் என்னாகும் தெரியுமா?

Latest Videos

click me!