Cancer Causing Foods: மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க.. புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் - உஷார்!!

Published : Jan 21, 2023, 04:21 PM IST

இன்றைய வாழ்க்கை முறையில், நாம் உண்ணும் உணவு வகைகளால் புற்றுநோய்க்கான ஆபத்து வேகமாக அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

PREV
15
Cancer Causing Foods: மறந்தும் கூட இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க.. புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் - உஷார்!!

1. மைக்ரோவேவ்

மைக்ரோவேவ் ஓவன் பலரின் வீட்டில் இருக்கக்கூடிய ஒன்றாகும். இது புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பாப்கார்னை மைக்ரோவேவில் வறுத்து சாப்பிட்டால் அது இன்னும் ஆபத்தானது. இதிலிருந்து, perfluorooctanoic அமிலம் உருவாகிறது. இது புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

25

2.மது

மதுபானங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக மது அருந்துவது வாய், உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் போன்ற உறுப்புகளில் புற்றுநோயையும் உண்டாக்கும் என்பது பல வகையான ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

35

3.பதப்படுத்தப்பட்ட உணவு

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் உப்பும், சர்க்கரையும் அதிகம் இருப்பதால் ஆபத்தானது. நம்மில் பெரும்பாலானோர் துரித உணவுக்கு பழகியுள்ளது தவறானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

45

4.ஆர்கானிக் அல்லாத பழங்கள்

ஆர்கானிக் அல்லாத பழங்களில் ரசாயனங்களின் கலவை இருக்கிறது. செயற்கையாக பழுக்கப்பட்ட பழங்கள் மற்றும் ரசாயனங்கள் மூலம் பழங்களுக்கு நிறமூட்டுதல் போன்றவையும் முக்கிய காரணங்களாகும். இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் அவற்றை நீண்ட நேரம் உட்கொள்ளக்கூடாது.

55

5. சோடா

சோடா உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதில் செயற்கை சர்க்கரை, நிறம் மற்றும் ரசாயனங்கள் இதில் காணப்படுவதால், புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன என்று அறிவுறுத்துகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories