ஊறவைத்த உலர் பழங்களை அதிகாலையில் சாப்பிட்டால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். இந்த ஊறவைக்கப்பட்ட உலர்ந்த பழங்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. சருமத்தை ஆரோக்கியமாகவும், அழகாகவும் மாற்றுகிறது. எந்த உலர் பழங்களை ஊற வைக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
பாதாம்
பாதாமை அப்படியே உண்பதை விட ஊறவைத்து எடுத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஊறவைத்த பாதாமை தினமும் காலையில் எடுத்து கொள்ளலாம். இதில் இரும்புச்சத்து, போலேட், வைட்டமின் பி12, வைட்டமின் டி, வைட்டமின் ஈ உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் சக்தி அளிப்பவை. பாதாம் இதயத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். இதனை தோலுரித்து உண்பது தான் சத்துக்களை பெற்று தரும்.