வேக வைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கிறீர்களா? புற்றுநோய் வரலாம்.. ஜாக்கிரதை!

First Published Dec 1, 2023, 7:28 PM IST

வேகவைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு அதை மீண்டும் பயன்படுத்துவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துமாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..

பொதுவாகவே எல்லா வீடுகளிலும் எந்த காய்கறிகள் இருக்கோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக உருளைக்கிழங்கு இருக்கும். உலகில் உருளைக்கிழங்கை விரும்புவோருக்கு பஞ்சமில்லை. இதன் காரணமாகவே, இது காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. 

ஆனால் சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வேகவைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. பெரும்பாலான மக்கள் இந்த தவறை செய்கிறார்கள். ஆனால் இது நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். 
 

வித்தியாசமான சுவையை கொடுக்கும்: வேகவைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்து மீண்டும் அவற்றை சமையலுக்கு பயன்படுத்தும் போது அதன் உண்மையான சுவையை இழந்து வித்தியாசமான சுவையை நமக்கு கொடுக்கும்.

இதையும் படிங்க:  ஒரு மாதம் உருளைக்கிழங்கு சாப்பிடாம இருந்தால் ஆரோக்கியம் எப்படி இருக்கும் தெரியுமா?

ஆரோக்கியத்திற்கு தீங்கு: வேகவைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜ் வைத்து மீண்டும் பயன்படுத்துவதால், அதில் இருக்கும் மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும். 

இதையும் படிங்க:  எச்சரிக்கை உருளை கிழங்கில் ஒளிந்திருக்கும் ஆபத்து...! இப்படி இருந்தால் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்...!

அதுமட்டுமின்றி, அதில் இருக்கும் அமினோ அமிலம் ஆஸ்பாரஜினுடன் கலந்து அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருளை உருவாக்குகிறது. இது காகிதம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எனவே நீங்களும் வேக வைத்த உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் இருந்தால் அவ்வாறு செய்யாதீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வேக வைத்த உருளைக்கிழங்கை சேமிக்க சரியான வழி: முதலில் உருளைக்கிழங்கை தேவைக்கேற்ப மட்டுமே வேக வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை வேக வைத்த உருளைக்கிழங்கு தற்செயலாக எஞ்சி இருந்தால், சாதாரண வெப்பநிலையில் வைக்கவும். மேலும் ஒரு பெரிய பாத்திரத்தில் பரப்பி தோலை அகற்றாமல் வைக்க வேண்டும்.

click me!