எச்சரிக்கை உருளை கிழங்கில் ஒளிந்திருக்கும் ஆபத்து...! இப்படி இருந்தால் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்...!
உலகில் உள்ள பலரால் விரும்பி உண்ணப்படும், கிழங்கு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. முக்கியமாக இந்தியாவில் உள்ள பலருக்கு உருளை கிழங்கு பயன்படுத்தி செய்யும் உணவு வகைகள் என்றால் மிகவும் விருப்பம் என்று கூறலாம்.
ஆனால் நாம் அன்றாடம் உண்ணும் உணவான உருளை கிழங்கிலும், சில தீமைகள் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் தெரிந்துக்கொள்வதில்லை. சாதாரணமாக உருளை கிழங்கு ஒரே நிறத்தில் இருந்தால் அதில் எந்த ஆபத்தும் இல்லை.
அதற்கு மாறாக, உருளை கிழங்கு பச்சை நிறத்தில் மாறி இருந்தால் அதை சாப்பிடக்கூடாது. இதில் தான் ஒளிந்திருக்கிறது ஆபத்து.
என்ன ஆபத்து என்பதை பாப்போம்:
சூரிய ஒளிப்படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் உருளைக்கிழங்கு மீது பச்சை நிறத் திட்டுகள் உண்டாகிறது.
இதில் கிளைகோல்கலாய்ட் இருப்பதால், இது தீங்கான ஒன்றாக மாறுகிறது. இதை சாப்பிடும் போது நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
அதே போல் நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயேரியா போன்றவை ஏற்படும்.
முதலில் பலவீனமாக இருக்கும், பின் கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. மேலும் கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது என வலியுறுத்துயுள்ளனர் மருத்துவர்கள்.