வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!

First Published | Apr 6, 2023, 12:44 PM IST

தயிரை பயன்படுத்தும்போது நாம் செய்யும் இந்த தவறுகள் உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 
 

கோடைகாலம் தொடங்கியுள்ளது. அடிக்கும் வெயிலுக்கு மோர், தயிர், இளநீர், மோர் என உடலுக்கு குளுமை தரும் உணவுகளை சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.  தினமும் தயிர் சாப்பிடுவதால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும். ஆயுர்வேதத்தின்படி, தயிரில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. 

தயிரின் நன்மைகள்! தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. குளிர்ச்சியை தரக் கூடியது. வயிற்று புண்களை குணமாக்கும். சருமத்தை பராமரிக்கும். உடலில் நச்சு நீக்கியாக செயல்படும். இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நீங்கள் தயிரை கவனமாக சாப்பிட வேண்டும். தயிரை உண்ணும்போது செய்யும் சில தவறுகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். அது குறித்து இங்கு காணலாம்.

Tap to resize

யாரெல்லாம் தயிர் சாப்பிடக் கூடாது!

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், கபம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்தப்போக்கு கோளாறுகள் அல்லது வீக்கத்துடன் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிடும்போது உடல்நிலை மோசமாகும். 

அதிகம் வேண்டாமே! 

மோராக குடிக்கும்போது செரிமானம் விரைவாக இருக்கும். ஆனால் தயிர் அப்படியல்ல, செரிமானம் ஆக நேரம் ஆகும். ஒருவேளை ஏற்கனவே உங்களுக்கு செரிமான அமைப்பு பலவீனமாக இருந்தால், தினமும் தயிர் சாப்பிடுவதை தவிருங்கள். செரிமான கோளாறு இருப்பின், அதிக தயிர் சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். 

பலவீனம்! 

தயிரில் கொழுப்பின் அளவு மிக அதிகமாக காணப்படுகிறது. இதை அதிகமாக சாப்பிட்டால் உங்கள் எடை அதிகரிக்கும். எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்குகிறது. இதனால் முழங்கால் வலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். 

இரவில் தயிர் 

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இரவில் தயிர் சாப்பிடுவதால் உடலில் சோர்வு ஏற்படும். இது சளி தொந்தரவிற்கு காரணமாகும். ஆயுர்வேத தகவல்களின்படி, தயிரின் இனிப்பு, துவர்ப்பு பண்புகள் சளியை உருவாக்குகின்றன. இது சுவாச பிரச்சனைகள், நாசி நெரிசல், கீல்வாதம், வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் இரவில் தயிர் எடுத்துக் கொள்ளக் கூடாது. 

தயிரை சூடுபடுத்தக் கூடாது! 

தயிரை நேரடியாக சூடு செய்யாவிட்டாலும், தயிர் கலந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தினால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். தயிர் சூடாகும்போது அதன் நல்ல பண்புகளை இழக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

தயிருடன் எதை உண்ணக் கூடாது? 

கோடையில் வெங்காயம் சாப்பிட வேண்டும் என வீட்டு நம் பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். கோடையில் வெங்காயம் சாப்பிடுவது வெப்ப பக்கவாதத்தைத் தடுக்கிறது. தயிர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெங்காயம் வெப்பத்தை அதிகமாக்கும். இந்நிலையில், வெங்காயம், தயிர் ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால், அது நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

தயிருடன் எதை உண்ணக் கூடாது? 

மாம்பழத்தின் இனிப்பான சுவை, தயிருடன் இணையும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகும். ஆனால் இந்த மாதிரி உண்பது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை பலர் அறிவதில்லை. நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழம், தயிரின் பண்புகள் வேறுபட்டவை. இவை தனித்தனியாக நன்மைகளை அளிக்கும். இவற்றை ஒன்றாக உட்கொள்வது உடலில் நச்சுகளின் அளவை அதிகரிக்கும். 

இதையும் படிங்க: எலுமிச்சை சாறுடன் மஞ்சள் கலந்து.. வெறும் 1 டம்ளர் குடித்தால்... இத்தனை நன்மைகளா!!

தயிருடன் எதை உண்ணக் கூடாது? 

கடல் உணவுகளையும், தயிரையும் சேர்த்து உண்ணக் கூடாது. சிலர் சிக்கன், மீன் போன்ற உணவுகளை தயிருடன் கலந்து உண்ண விரும்புவார்கள். மீனில் புரதத்தின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதைப் போல தயிரிலும் புரதம் அதிகம் காணப்படுகிறது. ஆனால் புரதத்தை அதிகமாக உட்கொள்ளும் போது, ​​நம் உடல் அதை ஜீரணிக்க திணறுகிறது. இதனால் வயிற்று வலி, அஜீரணம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

தயிர் உண்ணும்போது இந்த விஷயங்களை மனதில் வைத்துகொள்ளுங்கள். அளவாக தயிர் எடுத்து கொள்ளும்போது உடலுக்கு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். 

இதையும் படிங்க: ஊறவைத்த வால்நட் பருப்பு..! வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் கிடைக்கும்!!

Latest Videos

click me!