ஊறவைத்த வால்நட் பருப்பு..! வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், இத்தனை நன்மைகள் கிடைக்கும்!!

First Published | Apr 6, 2023, 7:55 AM IST

soaked walnut benefits in tamil: ஊறவைத்த வால்நட் பருப்பை உண்ணும் போது கிடைக்கும் நன்மைகள்.. வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிட்டால் உடலுக்கு இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும். 

வால்நட் என்னும் அக்ரூட் பருப்பு (walnuts) நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதில் உதவுகிறது. ஊறவைத்த வால்நட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. சுவையை பொறுத்தவரை வால்நட்ஸ், மற்ற பருப்புகளை காட்டிலும் கசப்பாக இருக்கும். கசப்பை விரும்பாதவர்கள் தேனில் கலந்து உண்ணலாம். ஆனால் ஊறவைத்தால் கொஞ்சம் கசப்பு தெரியாது. 

வால்நட் சத்துக்களின் பட்டியல்! (walnuts benefits tamil)

கொழுப்பு இல்லை, ஆனால் புரதம் – 15 கி உள்ளது. சோடியம் – 0.2 மி.கி, ரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொட்டாசியம் – 441 மி.கி என்ற அளவில் உள்ளது. 

வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.  

Latest Videos


மூளை செயல்பாடு 

வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்பாடு அடைய செய்கிறது. குழந்தைகளுக்கு இந்த பருப்பை கொடுப்பதால் அவர்களுடைய சிந்தனை திறன் மேம்படும். நாள்தோறும் காலையில் 5 வால்நட் பருப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நினைவாற்றலை மேம்படுத்தும். 

புற்றுநோய் எதிர்ப்பு பண்பு 

நாள்தோறும் ஊறவைத்த வால்நட் பருப்பை பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு குறையும். கணைய புற்றுநோய் அபாயத்தையும் இது தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊற வைத்த வால்நட்டை தினமும் உண்ணலாம். 

நல்ல தூக்கம் 

இரவில் தூக்க கோளாறால் அவதிப்படுபவர்கள் வால்நட் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். நாள்தோறும் இரவில் சாப்பாட்டுக்கு பின்னர் பாலில் வால்நட்ஸ் போட்டு அல்லது தனியாக அதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகிவிடும். ஆழ்ந்த உறக்கம் வரும். 

​நோய் எதிர்ப்பு சக்தி

வால்நட்ஸில் உள்ள புரதச்சத்தும், நல்ல கொழுப்பு சத்தும் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும். ஊறவைத்த வால்நட்ஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 

எடை குறைப்பு 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வால்நட்ஸ் என்ற அக்ரூட் உண்ணலாம். இதில் கெட்ட கொழுப்பு இல்லை என்பதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பி காணப்படும். அடிக்கடி பசி எடுக்காது. 

இதையும் படிங்க: சீரகம் நல்லதுனு நினைச்சுருப்பீங்க.. ஆனா ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்...!

தலைமுடி பிரச்சனை 

வால்நட்ஸில் உள்ள வைட்டமின் பி7 தலைமுடியை வலிமையாக்கும். இதனால் தலைமுடி உதிர்வு குறையும். முடி நன்கு வளரும். 

​இளமையாக இருக்கலாம் 

உடலின் வறட்சியை போக்க வால்நட்ஸ் உதவுகிறது. உங்களுடைய நெற்றி, சருமத்தில் வரும் சருமச் சுருக்கம் நீங்கி, சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். வால்நட்ஸை கொஞ்சம் பால் கலந்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இதை சருமத்தில் பூசினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் சரும அழுக்கு, கருந்திட்டுக்கள் நீங்கும். 

​அஜீரணக் கோளாறு 

மலச்சிக்கல் இருந்தால் உடலில் பல உடல்நல கோளாறுகள் ஏற்படும். அதற்கு அஜீரணக் கோளாறு முக்கிய காரணம். செரிமான கோளாறு இருப்பவர்கள் நாள்தோறும் ஊறவைத்த வால்நட்ஸ் உண்பதால் செரிமான கோளாறு சரியாகும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் சீராகும். 

​பித்தப்பை கற்கள் நீங்கும்

பித்தப்பையில் கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பருப்பை ஊறவைத்து உண்ணலாம். இப்படி வால்நட்ஸை நாள்தோறும் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் மெல்ல கரையும். உங்களுக்கு வலிக்காமல் கற்கள் வெளியேறிவிடும். 

இதையும் படிங்க: வைட்டமின் C-க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா! அதுவும் கோடையில் உடல் சூட்டை விரட்டி, நோய் எதிர்ப்பு சக்தி தரும்!

click me!