பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி, வீட்டில் கறக்கும் பசும்பாலாக இருந்தாலும் சரி, அதை காய்ச்சாமல் பச்சையாகக் குடிப்பது நல்லதல்ல. பசு அல்லது எருமை உண்ணும் புல்லில் உள்ள பாக்டீரியாக்கள் பாலில் சேர்க்கின்றன. பச்சைப் பால் உட்கொள்ளும் போது பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே பாலை காய்ச்சி குடிக்க வேண்டும்.
பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் பால் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது அங்கேயே ரொம்ப நேரம் நிற்க யாரும் விரும்புவதில்லை. அதனால் அதிகமான தீயில் வைத்து உடனே காய்ச்சிவிட்டு சமையலறையை விட்டு வெளியேற நினைக்கின்றனர். ஆனால் அப்படி விரைவில் பாலை காய்ச்சுவது தவறு என்கிறார்கள். பாலை சரியாக கொதிக்க வைத்து குடிக்காமல் இருந்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, பால் மட்டுமல்ல, நீங்கள் அதிக வெப்பத்தில் எந்த உணவையும் சமைக்கக்கூடாது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. பால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. பால் குடித்தால் மட்டும் போதாது, சரியான முறையில் பால் உட்கொள்ள வேண்டும். பாலில் உள்ள சத்துக்கள் தான் நம் உடலுக்குள் செல்கிறது. குடிப்பதற்கு முன், பாலை சரியாக சூடாக்கிக் கொள்ளுங்கள்.
பால் அதிகமாக காய்ச்சினால் சிக்கல்!
* விரைவில் கொதிக்கும் பால் அதிலுள்ள இயற்கை சர்க்கரையை விரைவில் எரித்துவிடும். இதனால் உடலுக்கு அந்த சத்துக்கள் கிடைக்காது.
* அதிக தீயில் பாலை விரைவாக கொதிக்க வைப்பது, பாலை பாத்திரத்தில் ஒட்டிக்கொள்ள செய்யும்.
* பாலை அதிகமாக கொதிக்க வைத்தால் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாலில் இருந்து பிரிக்கத் தொடங்கும்.
* பாலை வேகமாக கொதிக்க வைக்கும் போது, பாலில் உள்ள நீர் ஆவியாகத் தொடங்குகிறது.
* அதிக தீயில் கொதிக்க வைத்தால் பாலில் நுரை பொங்கி வரும். அது எங்கும் கொட்டுகிறது. இதனால் அடுப்பு அழுக்காகும் வாய்ப்பு அதிகம்.
பாலை சீக்கிரம் சூடுபடுத்துவது நல்லதல்ல. அதைப் போல அதிகமாக காய்ச்சுவதும் சிறந்த முறை கிடையாது. பால் சூடாகும்போது, அது சுற்றி கொப்பளிக்கத் தொடங்குகிறது. மெல்ல பொங்கி வரும். அப்போது நீங்கள் எரிவாயுவை அணைத்தால் நல்லது. பாலை அதிகம் காய்ச்சினால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். பாலின் நிறமும் மாறுகிறது. பாலின் சுவையில் மாற்றம் இருப்பதையும் நீங்கள் கவனிப்பீர்கள். பாலை மீண்டும் மீண்டும் சூடாக்குவதும் நல்ல பழக்கம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: வைட்டமின் C-க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா! அதுவும் கோடையில் உடல் சூட்டை விரட்டி, நோய் எதிர்ப்பு சக்தி தரும்!