பங்குனி உத்திரம் 2023: கந்தருக்கு பிடித்த கந்தரப்பத்தை நெய்வேத்தியமாக படைத்து முருகனின் அருளாசி பெறுங்கள்!

First Published | Apr 4, 2023, 9:50 PM IST

வாருங்கள்!கந்தருக்கு பிடித்த கந்தரப்பத்தை வீட்டில் எப்படி எளிமையக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் பங்குனி உத்திரமும் விசேஷமான ஒரு நாள் ஆகும். பங்குனி உத்திரமான நாளை முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த நெய்வேத்தியமான அப்பம் செய்து படைப்பது மிகவும் சிறப்பாகும்.

முருகனின் மற்றொரு பெயர் கந்தர். அப்படி கந்த பெருமானுக்கு மிகவும் விருப்பமான இந்த அப்பத்தை நாளடைவில் அனைவரும் கந்தரப்பம் என்று அழைக்க தொடங்கினார்கள். ஆகையால் இந்த கந்தரப்பத்தினை நாளை முருகப் பெருமானுக்கு நெய்வேதியமாக செய்து வழிபட கந்தப்பெருமான் மனம் மகிழ்ந்து, நாம் நினைக்கும் காரியத்தையும், வேண்டுதலையும் அள்ளித் தருவார் என்பது ஐதீகம்.

இந்த கந்தரப்பத்தின் பிறப்பிடம் செட்டிநாடு ஆகும். இது செட்டிநாட்டில் நடைபெறும் அனைத்து முக்கியமான விஷேஷங்களிலும் முக்கிய மற்றும் தவிர்க்க முடியாத பலகாரமாக பரிமாறப்படுகிறது. இது மிகவும் மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.கந்தரப்பம் செட்டிநாட்டின் பெரும்பாலான விருந்துகளில் உள்ளது.

வாருங்கள்! கந்தருக்கு பிடித்த கந்தரப்பத்தை வீட்டில் எப்படி எளிமையக செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்-

பச்சரிசி-1 கப்
புழுங்கல் அரிசி-1/2 கப்
வெல்லம் -3/4 கப்
உளுந்தம் பருப்பு – 1/4 கப்
வெந்தயம்-அரை தேக்கரண்டி
ஏலக்காய் -3
தேங்காய் துருவியது-1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

ஒரு பத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி , அதில் வெந்தயம் சேர்த்து சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் அரிசி,உளுந்து மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து பாகு செய்து கொள்ள வேண்டும். இந்த வெல்ல பாகினை அரைத்த மாவினில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

Latest Videos


அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெயை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கொதித்த பின்னர் அடுப்பின் தீயனை சிம்மில் வைக்க வேண்டும்.
 

இப்போது கடாயில் 1/2 கரண்டி அளவு மாவை எடுத்து, கொதிக்கும் எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்தால் தித்திக்கும் சுவையில் கந்தரப்பம் ரெடி! இதே போன்று அனைத்து மாவினையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கந்தரப்பம் சுட்டு எடுக்க வேண்டும்.

பங்குனி உத்திரமான நாளை விரதம் இருப்பவர்கள், விரதம் இருக்க இயலாதவர்கள் இந்த கந்தரப்பத்தை வீட்டில் செய்து முருகனுக்கு படைத்து முருகப்பெருமானின் அருளாசி பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்!

குறிப்பு: எண்ணெய் சேர்க்க விரும்பாதவர்கள் இட்லி பத்திரத்தில் ஊற்றி ஆவியில் வைத்து 3 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் பஞ்சு போன்ற சாஃப்ட்டான அப்பம் ரெடி!

பங்குனி உத்திரத்தன்று இந்த 1 பொருளை வீட்டில் வைத்து வழிபட்டால் வாழ்வில் அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்!

click me!