கோடைகாலத்தில் பலரும் எலுமிச்சை பழத்தை வீட்டில் பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஏனென்றால் வெயிலின் உக்கிரத்தை எலுமிச்சை சாறு தணித்துவிடும். உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்தும் காணப்படுகிறது. மஞ்சள் உட்கொண்டால், அது நம் உடலில் கிருமிநாசினியாக செயல்படும். இந்த இரண்டு பொருள்களையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அற்புதமான பலன்கள் தான் கிடைக்கும். அதை இங்கு காணலாம்.
எலுமிச்சை, மஞ்சள் பானம் நன்மைகள்!
*மிதமான சூடுள்ள நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து, அதனுடன் சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு குடித்தால் உடலில் இருக்கும் நச்சுகள் நீங்கிவிடும்.
*தினமும் காலையில் எலுமிச்சை சாறு, கொஞ்சம் மஞ்சள் இரண்டையும் வெந்நீரில் சேர்த்து குடித்து வந்தால் எடை கணிசமாக குறையும். எண்ணெய் உணவுகள், இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் கலந்து குடித்தால் நம் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகள் கரையும்.