2 பொருள் போதும் இந்த சட்னி செய்ய! இட்லி பிடிக்காதவர்கள் கூட 10 சாப்பிடுவார்கள்!

First Published | Apr 6, 2023, 9:57 AM IST

வாருங்கள்! இரண்டே 2 பொருள் மட்டும் வைத்து ருசியான சுள்ளுனு இருக்கும் சட்னியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் இட்லியும், தோசையையும் தவிர்க்க முடியாத உணவுகள் என்றே கூற வேண்டும். சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உடல் நிலை சரி இல்லாதவர்கள்,வயதானவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற உணவு தான் இந்த இட்லியும், தோசையும். தவிர இந்த இட்லி,தோசையை மிக விரைவாக செரிமானம் ஆகும் தன்மை பெற்ற உணவுகள் கூட.

மாவு கைவசம் இருந்தால் போதும், 10 நிமிஷத்தில் இட்லி,தோசையை ரெடி பண்ணி சாப்பிடலாம். ஆனால் இந்த இட்லி,தோசைக்கு தினமும் மாதிரியான சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிட்டால் யாராக இருந்தாலும் சலித்து போய் விடுவார்கள். பின் இட்லி என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுளிப்பார்கள்.

ஆகையால் நாம் செய்யும் சட்னியை பொறுத்து தான் இட்லி,தோசைகளை நம் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். கொஞ்சம் வித்தியாசமாக, அதே நேரத்தில் மிக சுவையாக இருந்தால் மட்டுமே அதுவும் சாத்தியம் .

அந்த வகையில் இன்று 2 வெறும் பொருள்களை பிரதானமாக வைத்து இந்த சட்னியை செய்ய உள்ளோம். இதனை செய்வது மிகவும் ஈஸி அதே நேரத்தில் டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும்.

வாருங்கள்! இரண்டே 2 பொருள் மட்டும் வைத்து ருசியான சுள்ளுனு இருக்கும் சட்னியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி-10
வர மிளகாய்-10
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- தேவையான அளவு
கடுகு-1/2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் தக்காளியை அலசி விட்டு அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் , அரிந்த தக்காளி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.தக்காளி நன்றாக வதங்கிய பின் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு ஆற வைத்து விட்டு மிக்சி ஜாரில் போட்டு சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

Weight Loss-சிறுநீரக கல்லை கரைக்க இயற்கை தந்த இதனை முயற்சி செய்து பாருங்க!வெறும் 3 நாட்களில் சூப்பரான ரிசல்ட்

Latest Videos


This tomato chutney is mouth watering

அடுப்பில் அதே வாணலி வைத்து 50 மில்லி அளவில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு கடுகு சேர்த்து தாளித்து பின் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். சட்னி நன்றாக கொதித்து சற்று கெட்டியாக மாறிய பின் அடுப்பில் இருந்து இறக்கினால் அட்டகாசமான சட்னி ரெடி!

இதனை இட்லி,தோசை, சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். தவிர வெளியூர் பிரயாணங்கள் செய்யும் போது இந்த சட்னியை செய்து கொண்டு செல்லலாம்.இப்படி சட்னியை செய்து சூடான இட்லியுடன் வைத்துக் கொடுத்தால் 10 இட்லி கூட சாப்பிடுவார்கள்.

தக்காளியின் விலை மலிவாக கிடைக்கும் இந்த நேரத்தில் இந்த சட்னியை செய்து பாருங்கள். 1 தக்காளிக்கு 1 மிளகாய் என்ற வீதம் சேர்க்க வேண்டும்.

click me!