Watermelon: வெயில் நேரத்தில் சூட்டை தணிக்க தர்பூசணி.. ஆனால் இந்த 3 உணவுகளோடு மட்டும் சாப்பிடாதீங்க!

First Published | Apr 28, 2023, 6:44 PM IST

கோடைகாலத்தில் தர்பூசணி பழத்தின் பலன்களை முழுமையாக பெற.. அதை சாப்பிட்ட பின்னர் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 

தர்பூசணி பழம் கோடையில் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். சரும பராமரிப்பு, உடல் குளுமை, சிறுநீர தொற்று உள்ளிட்டவற்றில் நம்மை பாதுகாப்பாக வைக்கும். ஆனால் இந்த பழத்தை வேறு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் பலன்களுக்கு பதிலாக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தர்பூசணி சாப்பிட்ட உடனே என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதை இப்போது பார்க்கலாம். 

பால் பொருள்கள் 

தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது உடல் நலத்திற்கு கொஞ்சமும் நல்லதல்ல. தர்பூசணியில் 'வைட்டமின் சி' அதிகம் உள்ளது. தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து வீக்கத்தை ஏற்படுத்தும். அவை செரிமான அமைப்பை பாதிக்கின்றன. அஜீரணத்தையும் உண்டாக்கும்.

Tap to resize

புரத உணவுகள்

தர்பூசணி சாப்பிட்ட பிறகு புரதம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆனால் தர்பூசணியில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறிது மாவுச்சத்தும் உள்ளது. பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த மாதிரி உணவுகளை சாப்பிடுவது செரிமான நொதிகளை சேதப்படுத்தும். அதனால் வயிற்றுப் பிரச்சனைகளும் ஏற்படும்.  

முட்டை

தர்பூசணி சாப்பிட்ட பிறகு முட்டை உண்ணக்கூடாது. முட்டையில் புரதம் மட்டுமின்றி ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்களும் காணப்படுகின்றன. தர்பூசணியும் அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் என்பதால், இதனை ஒன்றன் பின் ஒன்றாகச் சாப்பிட்டால் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வரும்.  

இதையும் படிங்க: நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி? இந்த 6 வழிகள் இருக்கு..! 1 தர்பூசணிக்குள் ஓராயிரம் நன்மைகள்!!

கோடைகாலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க தர்பூசணி சாப்பிடுங்கள். அதே நேரத்தில் அதைச் சாப்பிட்ட பிறகு முட்டை, புரத உணவுகள், பால் உணவுகள் சாப்பிடுவதை தவிருங்கள். நீங்கள் தர்பூசணி சாப்பிடும் போதெல்லாம் சுமார் 30 நிமிடங்களுக்கு எந்த உணவையும் சாப்பிட வேண்டாம். அப்போது நம்முடைய உடல் தர்பூசணியின் சத்துக்களை உறிஞ்சிவிடும். இது வாயு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும். 

இதையும் படிங்க: Silver: வெள்ளி பாத்திரங்களில் இவ்வளவு நன்மைகளா! காசு இருக்கப்போ வாங்கி வெச்சிக்கோங்க..

Latest Videos

click me!