பாதாமில் இயற்கையாகவே உள்ள பைடிக் அமிலம் (Phytic Acid) ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. ஊறவைக்கும்போது, இந்த பைடிக் அமிலம் நீக்கப்பட்டு, பாதாமில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் எளிதில் உடல் உறிஞ்சிக்கொள்ளும். மேலும், பாதாமின் தோல் சற்று கடினமாக இருக்கும், ஊறவைக்கும்போது அது மென்மையாகி செரிமானத்தை எளிதாக்குகிறது.
நன்மைகள்: பாதாம் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஈ (Vitamin E) மூளை செல்களைப் பாதுகாக்கிறது. இதில், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளையும் பற்களையும் வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் (Antioxidants) சருமத்தைப் பளபளப்பாக்கி, இளமையாக வைத்திருக்க உதவும். மேலும், நல்ல கொழுப்புகள் நிறைந்திருப்பதால், இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
எப்படி உட்கொள்வது: இரவு 6-8 பாதாம்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தோலுரித்து சாப்பிடவும்.