weight loss உடல் எடை குறையணுமா? இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்காதீங்க

Published : May 20, 2025, 05:25 PM IST

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கண்டிப்பாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சில உணவை தவிர்ப்பதுடன், சில பொருட்களுடன் சேர்த்து கண்டிப்பாக சாப்பிடவே கூடாது. இதுவும் எடையை அதிகரிக்க வைக்கும்.

PREV
16
வெள்ளை அரிசி மற்றும் நெய் / எண்ணெய்:

வெள்ளை அரிசி இயற்கையாகவே அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டது, அதாவது இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தும். இதனுடன் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கும்போது, நெய்யில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் எண்ணெயில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எடை அதிகரிப்புக்கு மட்டுமல்லாமல், இரத்ததில் சர்க்கரை அளவை நிலையற்றதாக ஆக்குகிறது. இது பசி உணர்வை விரைவில் தூண்டி, மீண்டும் அதிக உணவு உட்கொள்ள வழிவகுக்கும்.

26
வறுத்த உணவுகள் மற்றும் சாஸ்கள்:

வறுத்த உணவுகள் அதிக எண்ணெயில் பொரிக்கப்படுவதால் அதிக கலோரிகளைக் கொண்டிருக்கும். இதனுடன் கிரீமி சாஸ்கள் அல்லது கெட்சப் போன்றவற்றைச் சேர்க்கும்போது, கலோரிகளின் அளவு மேலும் அதிகரிக்கிறது. சாஸ் மற்றும் கெட்சப்களில் பெரும்பாலும் கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகளைக் கொண்டிருக்கும் இதனால் இவை இரண்டும் சேர்ந்து உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ந்து உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன.

36
பீட்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்:

பீட்சா ஒரு சுவையான உணவு என்றாலும், இது சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்பட்டிருப்பதால் அதிக கலோரிகளைக் கொண்டிருக்கும். அதோடு, பெப்பரோனி, தொத்திறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைச் சேர்க்கும்போது, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. சீஸ் வேறு கூடுதல் கலோரிகளைச் சேர்க்கிறது. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.

46
இனிப்பு பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள்:

சோடா, பழச்சாறுகள் மற்றும் பிற இனிப்பு பானங்களில் அதிக அளவு சர்க்கரை உள்ளதால் இவை உடலில் "வெற்று கலோரிகள்" என்று அழைக்கப்படுகின்றன, அதாவது அவற்றில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது. இதனுடன் சிப்ஸ், பிஸ்கட் போன்ற அதிக கலோரிகள் கொண்ட நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

56
பாஸ்தா மற்றும் கிரீமி சாஸ்கள்:

பாஸ்தா, குறிப்பாக வெள்ளை பாஸ்தா, அதிக கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டது. இதனுடன் கிரீம், வெண்ணெய் மற்றும் சீஸ் கொண்டு தயாரிக்கப்படும் சாஸ்கள் கலோரிகளின் அளவை வெகுவாக அதிகரிக்கின்றன. இந்த சாஸ்கள் அதிக நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இவை உடல் எடையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கலாம்.

66
பால் மற்றும் வாழைப்பழங்கள்:

பால் மற்றும் வாழைப்பழங்கள் தனித்தனியாக ஆரோக்கியமானவை. பால் கால்சியம் மற்றும் புரதச்சத்து நிறைந்தது, வாழைப்பழம் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம். ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக அதிக அளவில் உட்கொள்ளும்போது, குறிப்பாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது, அதிக கலோரிகளைச் சேர்க்கலாம். மேலும், சிலர் பாலில் சர்க்கரை சேர்த்தும் குடிப்பார்கள், இது கலோரிகளை மேலும் அதிகரிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories