முதலில் மீன் மீது கத்தியால் கீறல்கள் இடவேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை சரியான அளவில் எடுத்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து, மீன் மீது தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் மீனை தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தூவி ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா தொக்கு செய்முறை:
மசாலா தொக்கு செய்வதற்கு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பூண்டு நன்றாக வதங்கிய பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் மசாலாத் தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்க்கவும். இறுதியாக தேங்காய் பால் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும். தொக்கு பதத்திற்கு வந்த பின்னர் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
வாழை இலையை அடுப்பில் வாட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு கரண்டி மசாலா தொக்கு பரப்பி, அதன் மேல் வறுத்த மீனை வைத்து, பின்னர் மீதமுள்ள தொக்கை வைத்து, இலையை பொட்டலமாக மடித்து கட்டிக் கொள்ளவும். இதை ஒரு தவாவில் சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் வெந்து வரும் வரை மிதமான தீயில் வாட்டி எடுக்க வேண்டும்.