வெயில் காலம் என்பதால் உடல் சூட்டை தணித்து, ஜில்லென்று இருக்க அடிக்கடி லெமன் ஜூஸ், சர்பத் என வீட்டில் கலந்து குடிப்பது வழக்கம். ஆனால் இப்படி வீட்டில் பானங்கள் தயாரிக்கும் போது சில விஷயங்களை முக்கியமாக கவனிக்க வேண்டும். சில விஷயங்களை தவறி செய்தால் கூட பெரிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
சர்பத் செய்வதற்கு முன்பே வெட்டி வைத்த எலுமிச்சையை பயன்படுத்துவது ஒருபோதும் நல்லதல்ல இது எலுமிச்சை வெட்டப்பட்டவுடன் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து அதன் சுவையும், நறுமணமும் குறையத் தொடங்கும். இதனால் சர்பத்தின் புதிய தன்மை குறைந்துவிடும். சர்பத் செய்யத் தொடங்கும் முன் உடனடியாக எலுமிச்சையை வெட்டி, சாறு பிழிந்து பயன்படுத்தவும். இது எலுமிச்சையின் முழு சுவையும், நறுமணமும் சர்பத்தில் கிடைக்க உதவும்.
25
அதிக எலுமிச்சை சாறு சேர்ப்பது:
சிலர், அதிக புளிப்புச் சுவைக்காக நிறைய எலுமிச்சை சாற்றை சேர்த்துவிடுவார்கள். ஆனால், அப்படிச் செய்வது சர்பத்தின் சுவையை மிகவும் புளிப்பாக மாற்றி, இனிப்புச் சுவையைக் குறைத்துவிடும். பொதுவாக, ஒரு லிட்டர் சர்பத்துக்கு 1/2 முதல் 3/4 கப் எலுமிச்சை சாறு போதுமானது. உங்கள் விருப்பத்திற்கேற்ப சிறிது கூட்டவோ குறைக்கவோ செய்யலாம், ஆனால் முதலில் குறைவான அளவில் சேர்த்து, தேவைப்பட்டால் பிறகு சேர்ப்பது நல்லது.
35
வெதுவெதுப்பான அல்லது சுடு தண்ணீரைப் பயன்படுத்துவது:
சர்க்கரையை எளிதில் கரைக்க வேண்டும் என்பதற்காக சிலர் வெதுவெதுப்பான அல்லது சுடு தண்ணீரைப் பயன்படுத்துவார்கள். அப்படிச் செய்வது எலுமிச்சை சாற்றின் சில ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும், சர்க்கரையை கரைக்க குளிர்ந்த அல்லது அறை வெப்பநிலை கொண்ட தண்ணீரைப் பயன்படுத்துவது சிறந்தது அது சர்பத்தின் சுவையை மேம்படுத்தும்.
சர்பத் செய்முறையில் சர்க்கரையின் அளவு மிக முக்கியமானது. குறைவான சர்க்கரை சேர்த்தால் சர்பத் மிகவும் புளிப்பாகவும், அதிக சர்க்கரை சேர்த்தால் மிகவும் இனிப்பாகவும் இருக்கும். சரியான அளவில் சர்க்கரை சேர்ப்பதுதான் சுவையை சமநிலைப்படுத்தும். நீரிழிவு நோயாளியாகள் சர்க்கரைக்குப் பதிலாக குறைந்த அளவில் தேன் அல்லது பனை வெல்லத்தை பயன்படுத்தலாம்.
55
சாதாரண உப்பு மற்றும் கருப்பு உப்பு இடையே குழப்பம்:
சாதாரண உப்பு (Sodium Chloride) ஒரு தூய உப்புச் சுவையைக் கொடுக்கும். இது சர்பத்தின் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவைகளை ஒருங்கே எடுத்து வர உதவுகிறது. கருப்பு உப்பு (Kala Namak) என்பது சோடியம் குளோரைடு மட்டுமல்லாமல், சோடியம் சல்பேட், சோடியம் பைசல்பேட் மற்றும் இரும்பு சல்பைடு போன்ற பிற கனிமங்களையும் கொண்டுள்ளது. இதனால் எலுமிச்சை சர்பத்திற்கு சற்று வித்தியாசமான சுவையை அளிக்கிறது.எலுமிச்சை சர்பத்துக்கு சாதாரண உப்புதான் சிறந்தது. இது எலுமிச்சையின் இயற்கையான சுவையை மேம்படுத்தும். கருப்பு உப்பை நீங்கள் ஒரு புதுமையான சுவைக்காக அல்லது செரிமானத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தலாம்.