காலையில் வெறும் 20 நிமிடங்கள் வாக்கிங் போனா போதுமா? என்னென்ன நன்மைகள்?

Published : May 28, 2025, 08:25 AM IST

தினமும் காலை வெறும் 20 நிமிடங்கள் நடப்பதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகளை இங்கு காணலாம்.

PREV
16
Is Walking 20 Minutes Enough For A Day

தினமும் உடற்பயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அமர்ந்த நிலையில் வேலை செய்வது பழகிவிட்டது. முன்பு போல உடல் உழைப்பு மக்களிடத்தில் காணப்படவில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்க போதுமான உடல் செயல்பாடுகள் தேவை. இதன் காரணமாகவே தினமும் ஏதேனும் உடற்பயிற்சி செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் எல்லோருக்கும் உடற்பயிற்சிகள் செய்வது சாத்தியமில்லை. அதற்கு ஈடாகதான் நடைபயிற்சி சொல்லப்படுகிறது. அனைத்து வயதினரும் செய்யக்கூடிய எளிய பயிற்சிதான் நடைபயிற்சி. தினமும் காலையில் வெறும் 20 நிமிடங்கள் நடந்தால் கூட உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

26
காலை நடைபயிற்சி;

காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வதால் மூட்டு விறைப்பு நீங்குகிறது. உயரத்த அழுத்தம் குறைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலை நேரம் நடைபயிற்சி உதவுகிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மேம்படுவதால் எண்ணங்கள் தெளிவாகும். படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும். மூட்டுகள் உறுதியாக, எலும்புகள், தசைகள் வலுவாக நடப்பது உதவும். வெறும் 20 நிமிட நடைபயிற்சியினால் கிடைக்கும் மற்ற நன்மைகளை பதிவில் காணலாம்.

36
எடை மேலாண்மை:

உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்ற பிரச்சனைகள் இருக்கலாம். இதனை சரி செய்ய நடைபயிற்சி உதவுகிறது. காலை வெறும் வயிற்றில் நடந்தால் அதிகபடியாக உள்ள கொழுப்புகள் குறைந்து எடை கட்டுக்குள் இருக்கும். சாப்பிட்ட பின் 10 நிமிடங்கள் நடப்பதும் நல்லது. இது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

46
இதய ஆரோக்கியம்

உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க நடைபயிற்சி முக்கிய பங்காற்றுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள், பக்கவாதம் போன்றவை வராமல் தடுக்கப்படுகின்றன. மாலையில் நடப்பதை விட காலை நேரத்தில் நடைபயிற்சி செய்வது கூடுதல் பலன்களை அடைக்கும்.

56
மனநலம்:

காலையில் இளம் வெயிலில் நடப்பதால் சூரிய ஒளி தோலில்பட்டு செரோடோனின் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் மனநிலை மேம்பட்டு மகிழ்ச்சியாக உணர்வீர்கள். காலையில் நடைபயிற்சி செய்வது மனசோர்வை குறைத்து எண்டோர்பின் வெளியீட்டை தூண்டுவதால் மனநலம் ஆரோக்கியமாக இருக்கும்.

66
நல்ல தூக்கம்

சரியாக தூங்காமல் இருப்பது தான் பல நோய்களின் ஆரம்பப் புள்ளி. நல்ல தூக்கம் பல நோய்களின் முற்றுப்புள்ளி. உங்களுடைய தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி செய்வது நல்லது. காலை நேர இளம்வெயிலில் நடப்பது உடலில் உயிரியல் கடிகாரமான சர்க்காடியன் தாளத்தை சீராக இயங்க வைக்கும். இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். இதனால் காலையில் உற்சாகமாக நாளை தொடங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories