காலை வாக்கிங் vs மாலை வாக்கிங்- எது எடை குறைப்புக்கு சிறந்தது?

Published : May 27, 2025, 08:51 AM IST

காலை அல்லது மாலை நேர நடைபயிற்சி எது உடல் எடையை குறைக்க உதவும் என இந்தப் பதிவில் காணலாம்.

PREV
15
Morning Walk or Evening Walk Which is Best for Weight Loss

உடல் எடையை குறைக்க நடைபயிற்சி சிறந்த பயிற்சியாகும். ஆனால் அதை காலை அல்லது மாலை எந்த நேரத்தில் செய்யும்போது கணிசமான அளவில் உடல் எடையை குறைக்க முடியும் என்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. இந்தப் பதிவில் எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும் என்பது குறித்து காணலாம்.

25
காலை vs மாலை வாக்கிங்:

அதிகாலையில் சுறுசுறுப்பான நடைபயத்தை செய்வது உங்களுடைய நாளை உற்சாகமாக தொடங்க உதவுகிறது வலசுதை மாற்றம் அதிகரிக்க காலை நேரங்கள் பயிற்சி உதவுகிறது காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்ததால் அதிகமான கலோரிகளை இருக்க முடியும் அது மட்டும் இன்றி வெறும் வயிற்றில் நடைபெற்று செய்வது ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இரவில் சாப்பிட்ட பின்னர் நடப்பது செரிமானத்தை தூண்டுகிறது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது இரவு நேரத்தில் ஏற்படும் பசியை குறைக்க நடப்பது உதவுகிறது எடை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

35
காலை நடைப்பயிற்சி நன்மைகள்:

காலையில் நடைபயிற்சி செல்வது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களை சுரக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து நாள் முழுவதும் தெளிவான மனநிலையில் செயல்படமுடியும். காலை நேர நடைபயிற்சி உடல் எடையை குறைக்கவும் கணிசமான அளவு பங்காற்றுகிறது. காலை நேரத்தில் ஒரு மணி நேரம் சுறுசுறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது அதிகப்படியான கொழுப்பை எரித்து எடையை குறைக்கிறது.

45
மாலை நடைப்பயிற்சி:

உங்களுடைய தூக்கத்தின் தரம் மேம்படுவதே பல உடல்நலப் பிரச்சனைகளை குறைக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இரவில் நல்ல தூக்கம் அவசியம். மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டால் மன அழுத்தம் குறைந்து இரவில் நல்ல தூக்கம் கிடைக்கிறது. உங்களுடைய நாள் முழுக்க ஏற்பட்ட வேலைப்பளு, மனச்சோர்வு ஆகியவை நீங்க மாலை நேரத்தில் நடக்கலாம்.

55
எப்போது நடக்கலாம்?

காலை நேர வாக்கிங் என்பது சூரிய உதயத்திற்கு சிறிது நேரத்தில் செல்ல வேண்டியதாகும். அப்போதுதான் இளம் வெயில், புதிய காற்று என இயற்கையான சூழலை முழுமையாக அனுபவிக்க முடியும். சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைக்கும். காலை 6.30 மணிக்கு முன்னர் நடந்து முடிக்க வேண்டும். மாலை நேரத்தில் ஆறு மணி முதல் எட்டு மணி வரை உங்களுக்கு ஏதுவான நேரத்தில் நடக்கலாம். இரவில் சாப்பிட்ட பின்னர் சிறிது நேரம் நடப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories