Walking Tips :தினமும் எத்தனை காலடிகள் நடக்குறீங்க? இந்த விஷயம் தெரியாம வாக்கிங் போகாதீங்க!!

Published : Jul 28, 2025, 08:56 AM IST

தினமும் எவ்வளவு காலடிகள் நடப்பது மோசமான உடல்நலப் பிரச்சினைகளில் காக்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

PREV
14

நடைபயிற்சி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் என்பது நாம் அறிந்ததே. ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை தரக்கூடிய மிதமான கார்டியோ பயிற்சிதான் நடைபயிற்சி. பல மோசமான உடல்நல பிரச்சனைகளை வரும்முன் தடுக்க ஒரு நாளுக்கு 7 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும் என அண்மையில் செய்யப்பட்ட மதிப்பாய்வு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.

24

10,000 காலடிகள் நடப்பது தான் உடலுக்கு ஆரோக்கியம் என சொல்லப்பட்ட நிலையில், 7000 காலடிகள் பல உடல்நல பிரச்சினைகளை தடுக்கிறது என இந்த ஆய்வு கூறுகிறது. வயதானவர்களுக்கு ஏற்படும் டிமென்ஷியா அபாயத்தை 38% குறைக்கவும், மனச்சோர்வு 22% குறைவும், நாள்பட்ட நோயான நீரிழிவு நோய் 14% குறையவும் நடப்பது உதவுகிறது.

34

7000 காலடிகள் நன்மைகள்

ஞாபக மறதி நோய், மன அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை தவிர புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் ஏழாயிரம் கால அடிகள் நடப்பது குறைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நீங்கள் பத்தாயிரம் காலடிகள் நடந்தால் தான் உங்களுக்கு பயன் என்பது முற்றிலும் கட்டுக்கதை. நீங்கள் நடக்கும் ஒவ்வொரு காலடிக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

44

எப்படி நடக்கலாம்?

நீங்கள் தினமும் 2000 முதல் 3000 காலடிகள் தான் நடக்கிறீர்கள் என்றால் கூடுதலாக ஆயிரம் காலடிகள் நடப்பது உங்களுக்கு நன்மை தரும். ஒவ்வொரு நாள் நடைபயிற்சியிலும் முதல் 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாகவும், பின்னர் வேகமாகவும் நடப்பதை வழக்கப்படுத்துங்கள். மெதுவாகவும் வேகமாகவும் வெவ்வேறு இடைவெளிகளில் மாறி மாறி நடப்பது உங்களுக்கு சிறந்த கார்டியோ பயிற்சியாகவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories