வெதுவெதுப்பான நீர்: காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், குடலின் இயக்கம் தூண்டப்பட்டு, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேற உதவும்.
எலுமிச்சைப் பழச் சாறு: எலுமிச்சை வைட்டமின் சியால் நிறைந்தது. இது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, கல்லீரலைச் சுத்தம் செய்ய உதவும். மேலும், இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
ஒரு துண்டு இஞ்சி : இஞ்சி செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இது வயிறு உப்பசத்தைக் குறைத்து, அஜீரணக் கோளாறுகளை நீக்க உதவும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஒரு சிட்டிகை பட்டை தூள் : பட்டை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் எனச் சொல்லப்படுகிறது. மேலும், பட்டைக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உண்டு.
ஒரு டீஸ்பூன் தேன் : சுவைக்காகவும், தேனில் உள்ள சில ஊட்டச்சத்துக்களுக்காகவும் சேர்க்கலாம். தேன் இயற்கையான ஆற்றலைத் தந்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.