எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், ஜிம்மிற்கு சென்று கஷ்டப்படாமல் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வெறும் 21 நாட்களில் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் மாதவன். அந்த சீக்ரெட்டை ரசிகர்களுக்காக அவர் வெளிப்படையாக பகிர்ந்தும் உள்ளார்.
மாதவன் தனது உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்திய முக்கிய விஷயம், "சாப்பிடும் முறையை மாற்றுவது" மற்றும் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் தான். இதில் மிக முக்கியமானது, உணவை நன்கு மென்று சாப்பிடுவது.
ஆம், மாதவன் ஒவ்வொரு கவளம் உணவையும் சுமார் 45 முதல் 60 முறை மென்று சாப்பிட்டாராம். இதை மாதவன் "உணவை குடிக்கவும், தண்ணீரைக் கடிக்கவும்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது, உணவை வாயில் வைத்து நன்கு மென்று, அது திரவ நிலையில் ஆகும் வரை சாப்பிட வேண்டும். தண்ணீரை மெதுவாக, வாய் முழுவதும் பரவும்படி குடிக்க வேண்டும். இது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது மற்றும் வயிறு நிரம்பிய உணர்வை விரைவாக தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
25
இந்த மெல்லும் பழக்கத்தால் என்ன நடக்கும்?
உணவை மெதுவாக, நன்கு மென்று சாப்பிடும்போது, மூளைக்கு வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னல் விரைவாகச் செல்லும். இதனால் நாம் தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்வதைத் தவிர்க்கலாம். இது இயற்கையாகவே கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
உணவை நன்கு மெல்லுவது, வாயிலேயே செரிமான செயல்முறையைத் தொடங்கிவிடுகிறது. இதனால் உணவு இரைப்பைக்கு செல்லும் போது, அது உடைக்கப்பட்டு செரிமானம் ஆவது எளிதாகிறது. இது அஜீரணம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும். உணவு நன்றாக மெல்லப்படும்போது, அதிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்.
35
நேரம் பிரித்து உண்ணும் முறை (Intermittent Fasting):
குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டுமே சாப்பிட்டு, மீதி நேரம் விரதம் இருப்பதாகும். இது உடலின் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மதியம் 3 மணிக்கு மேல் பச்சையான உணவுகளுக்கு பதிலாக (சாலட், பழங்கள் போன்றவை) சமைத்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். இது செரிமானத்தை எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது. கடைசி உணவை இரவு 6:45 மணிக்குள் முடித்துக்கொண்டு, அதற்குப் பிறகு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இத்னால், உடல் குளுக்கோஸை எரித்து கொழுப்பைக் கரைக்கும் நிலையை அடைய உதவுகிறது. பச்சையான உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுக்கும் என்பதால், இரவில் அவை சிலருக்கு அஜீரணத்தை ஏற்படுத்தலாம்.
தினமும் காலையில் நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், கலோரிகள் எரிக்கவும் உதவுகிறது. காலையில் வெளிச்சத்தில் நடப்பது உடலின் இயற்கையான கடிகாரத்தை சரிசெய்து, சிறந்த தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.
சரியான தூக்கம்: சீக்கிரம் படுக்கச் சென்று, ஆழ்ந்த தூக்கத்தைப் பெற தூங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு எந்தவித திரை (மொபைல், டிவி) பார்ப்பதை தவிர்த்திட வேண்டும். நல்ல தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கும், எடை குறைப்பிற்கும் மிக அவசியம். தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, பசியை அதிகரித்து, எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
55
பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்ப்பு:
பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். அதற்கு பதிலாக, எளிதில் செரிமானமாகக்கூடிய, ஆரோக்கியமான, பச்சை காய்கறிகள் நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிக சர்க்கரை, உப்பு, செயற்கை ரசாயனங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இருப்பதால், அவை உடல் எடை அதிகரிக்கவும், பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.
எப்படி இது சாத்தியம்: பலரும் யோசிப்பது இதுதான். ஆம், மாதவன் சில ஆண்டுகளுக்கு முன்பு 'ராக்கெட்ரி: தி நம்பி விளைவு' என்ற படத்திற்காக உடல் எடையை அதிகரித்து இருந்தார். பின்னர், அந்த எடையை எந்தவித கடுமையான உடற்பயிற்சிகளும் இல்லாமல், மீண்டும் தனது பழைய உடல் அமைப்பிற்கு வர இந்த எளிய, ஆனால் மிகவும் பயனுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடித்து வெறும் 21 நாட்களில் குறைத்து அனைவரையும் திகைக்க வைத்தார்.