வாக்கிங் செல்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைப்பதோடு, உடல் உறுதிக்கும், சமநிலைக்கும் உதவுகிறது. அதனால் நடைபயிற்சி செய்யுமாறு மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். வாக்கிங் வயது சம்பந்தமான அறிவாற்றல் குறைபாடு தடுப்பதற்கு உதவுகிறதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
24
நடைபயிற்சி
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் 55 முதல் 80 வயது உட்பட்ட முதியவர்களிடம் ஒரு ஆராய்ச்சி செய்யப்பட்டது இதில் கலந்து கொண்டவர்களை இரு குழுக்களாக பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழுவினருக்கு வாரத்தில் மூன்று முறை 40 நிமிடங்கள் வாக்கிங் செல்ல அறிவுறுத்தப்பட்டது. இரு குழுவினருக்கும் சோதனையின் முடிவில் எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. நடைபயிற்சி செய்தவர்கள் குழுவில் உள்ளவர்களுக்கு ஹிப்போகேம்பஸின் அளவு வயதுக்கு ஏற்ப சுருங்காமல், சராசரியாக 2% அதிகரித்தது ஆராய்ச்சியில் தெரிய வந்தது.
34
ஹிப்போகேம்பஸ்
நம் மூளையில் உள்ள முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸ் நினைவாற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதாகும்போது அல்சைமர் நோயால் முதலில் இந்த பகுதிதான் பாதிக்கப்படும். நினைவாற்றல் இழப்புதான் வயதான செயல்முறையில் முதலாவதாக நடக்கும் என்பதை ஆய்வு நிராகரிக்கிறது. இந்த ஆய்வில் வயதாகும்போது மூளை மாறக்கூடியது எனவும், லேசான உடற்பயிற்சி செய்வதால் அதனை மேம்படுத்த முடியும் என்றும் நிரூபித்துள்ளது. வாக்கிங் செல்வது அறிவுசார் செயல்பாட்டை முன்னேற்றம் அடைய செய்வதோடு, மூளை விரிவாக்கத்தையும் மேம்படுத்தும்.
நடைபயிற்சியால் மூளைக்கு இரத்த ஓட்டம் மேம்படுகிறது. வளர்ச்சி ஹார்மோன் உற்பத்தி தூண்டப்படுவதால் மூளை ஆரோக்கியம் மேம்படுகிறது. அனைத்து வயதினரும் நடைபயிற்சி மேற்கொள்வதால் மூளை ஆரோக்கியமும் மேம்படும். வயதானவர்களுக்கு கூடுதல் பயனுள்ளது. தினமும் நடைபயிற்சி செல்வது மன ஆரோக்கியத்திற்கும், உடலுக்கும் சிறந்தது.
மூளையை ஆரோக்கியத்தைப் பராமரிக்க வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறை 40 நிமிடங்கள் நடக்கலாம். தினமும் நடப்பது ஒட்டுமொத்த உடலுக்கும் நன்மை செய்யக் கூடியது.