Walking Pads : வாக்கிங் பேட் பத்தி தெரியுமா? வீட்டில் இருந்தபடியே பிட்னஸ் பழகலாம்!!

Published : Jun 24, 2025, 07:00 AM IST

ட்ரெட்மில்லில் செல்வதை விட வாக்கிங் பேட் வசதியாகவும், பயன்படுத்த சுலபமாகவும் இருக்கும்.

PREV
15
நடைபயிற்சி

உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு வாக்கிங் செல்வதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். மருத்துவர்களும் தினமும் தீவிரமான உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் நடைபயிற்சியை மட்டும் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றனர்.

25
வாக்கிங் பேட் அல்லது ட்ரெட்மில்

நடைபயிற்சி ஒட்டுமொத்த உடலுக்குமான பயிற்சியாகும். இதனை செய்ய எந்த சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. ஆனால் அனைவராலும் வீட்டிற்கு வெளியே சென்று நடக்க முடிவதில்லை. வீட்டிற்குள் நடக்கவும் போதிய இடவசதி இருக்காது. நேரம், சுற்றுச்சூழல் போன்றவை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. இது மாதிரியான சமயங்களில் ட்ரெட்மில்லில் நடப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையும் வாங்கி வைப்பதற்கு வீட்டில் போதுமான இடம் தேவைப்படும். ஆனால் வாக்கிங் பேட் ட்ரெட்மில்லை விட விலை குறைந்தது; இதனை வீட்டில் எந்த பகுதியிலும் பயன்படுத்த முடியும். இட பற்றாக்குறையும் ஏற்படாது. இந்தப் பதிவில் வாக்கிங் பேட் பற்றி குறித்து தெரிந்து கொள்வோம்.

35
வாக்கிங் பேட் என்றால் என்ன?

வாக்கிங் பேட் என்பது வீட்டில் சிறிய இடத்தில் பயன்படுத்தும் அளவில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட பட்டை போன்ற அமைப்பாகும். இதில் நடந்து முடித்த பிறகு பாய் மாதிரி மடக்கி வைத்துக் கொள்ளலாம். வீட்டில் குறைந்த இடம் இருப்பவர்கள் வாங்கி பயன்படுத்த இவை சிறந்த தீர்வாக இருக்கும். இந்த வாக்கிங் பேட் மிதமான மற்றும் தீவிர பயிற்சிகளுக்கு ஏற்றது. ட்ரெட்மில்லில் ஓடவும், நடக்கவும் முடியும். ஆனால் வாக்கிங் பேட் நடப்பதற்காகவே தயாரிக்கப்பட்டவை. இவை கைப்பிடிகள் கொண்டிருக்காது. ஆகவே நடக்கும்போது மிதமான வேகத்தில் கவனமாக நடக்கவேண்டும்.

45
பயன்கள்

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாக்கிங் பேட் நன்றாகவே உதவும். கார்டியோ பயிற்சிகளுக்கு நிகராக இதயத்தை ஆதரிக்கும். மனநிலையை மேம்படுத்தும். உங்களுடைய உடலின் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தும்.

வாக்கிங் பேட்டில் நடந்தால் மூட்டு ஆரோக்கியம், நெகிழ்வுத்தன்மை மேம்படும். இடுப்பு மற்றும் முழங்கால்களில் வலி நிவாரணம் கிடைக்கும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் வாக்கிங் பேடில் அவ்வப்போது நடந்தால் விறைப்பை எதிர்த்துப் போராட உதவும்.

55
யாருக்கு நல்லதல்ல?

ஏதேனும் காயங்கள், எலும்பு முறிவுகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் இதில் நடக்கும்போது வழுக்கி விழும் அபாயங்களை அதிகரிக்கக் கூடும். சரியான தோரணையுடன் நடக்காவிட்டால் முதுகு, முழங்கால், கால் வலி தீவிரமாகும். நடக்கும்போது அதிக பதற்றத்தை ஏற்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories