நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் பல நோய்களை வரும் முன்தடுக்க முடியும். பொதுவாக தொற்றுகளைத் தடுப்பதற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியமாகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்தான உணவு, நல்ல தூக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை அவசியமாகிறது. மேலும் தொற்றுக்கு எதிராக செயல்படும் செல்களை வலுப்படுத்த சில பயிற்சிகளும் இருக்கின்றன. அவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். நோய் எதிர்ப்பு செல்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இங்கு ஐந்து வகையான பயிற்சிகளை காணலாம்.
26
நடைபயிற்சி
சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வதால் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும். தினமும் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைபயிற்சி செய்வது இதயத் துடிப்பை அதிகரிக்கும். உடலில் உள்ள நோயெதிர்ப்பு செல்களை மேம்படுத்த உதவுகிறது. இளம் வெயிலில் நடந்தால் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி உற்பத்தியாக உதவும். இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் அவசியமான ஊட்டச்சத்தாகும்.
36
யோகா
யோகா செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். சுவாசப்பயிற்சிகள், தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கும். மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோன்கள் அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். தினமும் யோகா செய்தால் மன அழுத்தம் குறையும். உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராடக் கூடிய திறன் மேம்படும். சைல்ட்ஸ் போஸ், டவுன்வர்ட் டாக், பிரிட்ஜ் போஸ் ஆகிய ஆசனங்கள் புதிதாக பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்றது.
தசைகளை வலுவாக்கும் வலிமை பயிற்சிகள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கும் நல்லது. எடை தூக்குதல், ஸ்குவாட்ஸ் எனும் குந்துகைகள், தண்டால் ஆகியவை நோயெதிர்ப்பு செல்களின் உற்பத்தியைத் தூண்டும்.
56
நீச்சல் பயிற்சி
நீச்சல் ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சியாகும். இதனால் மூட்டுகள், இதயம், நுரையீரல் போன்றவை வலுவாகும். நீச்சல் பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த பயிற்சியாகும். நீச்சலடிக்கும்போது மனநிலையை மேம்படுத்தும் எண்டோர்பின்கள் சுரப்பதால் வீக்கம் குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
66
நடனம்
நடனமாடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலை அசைக்க நடன பயிற்சிகள் உதவுகின்றன. நடனமாடுவதால் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இரத்த ஓட்டமும் சீராகும். நடனம் ஆடும்போது மனநிலை சீராகும். நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கும் மனச்சோர்வு, தனிமை போன்ற எதிர்மறை உணர்வுகளைக் குறைக்க நடனம் உதவுகிறது.