நீங்கள் இண்டர்மிட்டண்ட் (Intermittent) என்ற விரத முறையை பின்பற்றலாம். 16/8 என்ற கணக்கில் 16 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் 8 மணி நேரம் உணவு எடுத்துக் கொள்வதே அந்த முறையாகும். இதற்கு பகலில் பட்டினி என்ற பொருள் அல்ல. உங்களுடைய உணவு நேரம் பகலில் அமையுமாறு இரவில் விரதம் இருக்கலாம். இரவ்உ உணவை மாலை 6 மணிக்குள்ளாக எடுத்துக் கொண்டால் போதும். அதன் பின்னர் அடுத்த நாள் காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உடலில் தேவையற்ற்ற கொழுப்பு பயன்படுத்தப்படும். எடையும் குறையும்.
தினமும் மிதமான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம் கூடவே இந்த விரதமுறையும் பின்பற்றினால் உடல் எடை விரைவாக குறையும்.