உடல் ஆரோக்கியத்திற்கும், வயிற்றுத் தசைகளை (Core) வலுவாக்குவதற்கும் 'கிரஞ்ச்' (Crunch) ஒரு சிறந்த எளிய உடற்பயிற்சி. வயிற்றின் முன்பகுதியை இலக்காகக் கொண்டு செய்யப்படும் இப்பயிற்சி, உடலுக்கு அளிக்கும் வியக்கத்தக்க நன்மைகளை இதில் காண்போம்.
கிரஞ்ச் பயிற்சி செய்யும்போது நமது முழு கவனமும் உழைப்பும் வயிற்றின் மேல் பகுதி தசைகளில் மட்டுமே (Upper Abdominal Region) குவிக்கப்படுகிறது. இதனால் தேவையற்ற அழுத்தங்கள் இன்றி, வயிற்று தசைகள் மிக விரைவாக வலுவடைகின்றன.
26
வயிற்றுப் பகுதியின் சகிப்புத்தன்மை அதிகரிப்பு :
இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வரும்போது, நமது உடலின் மையப் பகுதியான 'கோர்' (Torso) தசைகளின் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. இது அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை சோர்வின்றி செய்ய உதவுகிறது.
36
முதுகுத்தண்டிற்குப் பாதுகாப்பு :
வழக்கமாகப் பலர் செய்யும் 'சிட்-அப்ஸ்' (Sit-ups) பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது, கிரஞ்ச் பயிற்சி மிகவும் பாதுகாப்பானது. இது நமது முதுகுத்தண்டில் உள்ள வட்டுக்களுக்கு (Spinal Discs) அதிக அழுத்தத்தைக் கொடுப்பதில்லை. இதனால் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
முறையாக கிரஞ்ச் பயிற்சி செய்வது உங்கள் வயிற்றுப் பகுதியை சீரமைக்கிறது. இதன் காரணமாக, நீங்கள் அமரும் போதும் அல்லது நிற்கும் போதும் உங்களது முதுகுத்தண்டு நேராக இருக்க இது துணைபுரிகிறது. இது உங்களை இன்னும் கம்பீரமாகக் காட்ட உதவும்.
56
உபகரணங்கள் தேவையில்லை :
இந்த உடற்பயிற்சியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், இதற்கு விலையுயர்ந்த உடற்பயிற்சி கூடத்திற்கோ (Gym) அல்லது தனித்துவமான உபகரணங்களுக்கோ தேவையிருக்காது. உங்கள் வீட்டில் உள்ள ஒரு சிறிய இடத்திலேயே ஒரு யோகா மேட் கொண்டு இதை மிக எளிதாகச் செய்யலாம்.
66
செரிமானம் சீராகும் :
நாம் கிரஞ்ச் செய்யும்போது வயிற்றுப் பகுதி மென்மையாக அழுத்தப்படுகிறது. இந்த செயல்முறை குடலின் இயக்கத்தைத் தூண்டி, உடலில் உள்ள கழிவுகள் எளிதாக வெளியேறவும், செரிமானம் சீராக நடக்கவும் மறைமுகமாக உதவி செய்கிறது.