தினமும் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பலரும் "10,000" என்று கூறுவர். ஆனால் ஆரோக்கியமாக இருக்க கண்டிப்பாக தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பெரும்பாலானவர்களிடம் சரியான பதில் இருப்பதில்லை.
தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் என்பது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம் மட்டுமே. ஜப்பானிய நிறுவனம் ஒன்று தங்கள் பொருளை விற்க உருவாக்கிய அந்த எண், காலப்போக்கில் உலக விதியாக மாறிவிட்டது! ஆனால் யாருடைய உடம்புக்கு எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க முடியுமோ அத்தனை அடிகள் நடந்தாலே போதுமானது.
26
7,500 ஸ்டெப்ஸ் போதுமாம் :
சமீபத்திய மருத்துவ ஆய்வுகளின் படி, தினமும் 7,500 அடிகள் நடந்தாலே இதய ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கான முழு பலன்களும் கிடைத்துவிடுகின்றன. அதற்கு மேல் நடப்பது போனஸ் தான், ஆனால் கட்டாயமில்லை!
36
4,000 அடிகளிலேயே தொடங்கும் மேஜிக்:
"என்னால் 7,000 கூட நடக்க முடியாது" என்பவரா நீங்கள்? கவலைப்படாதீங்க. தினமும் வெறும் 4,000 அடிகள் நடக்கத் தொடங்கினாலே, மரண ஆபத்து பாதியாக குறைகிறது என்கிறது அறிவியல். ஏதோ ஒரு ஆரம்பம்.. அதுவே போதும்!
கடமைக்கு என்று மெதுவாக 10,000 அடிகள் நடப்பதை விட, இதயத் துடிப்பு சற்று அதிகரிக்கும் வகையில் வேகமாக (Brisk Walk) 3,000 அடிகள் நடப்பது பல மடங்கு அதிக கலோரிகளை எரிக்கும்!
56
போரடிக்காமல் நடக்க எளிய ட்ரிக்ஸ்:
ஒரே இடத்தில் நடப்பது போரடித்தால் பிடித்த பாடல்கள் அல்லது பாட்காஸ்ட் கேட்டுக் கொண்டே நடங்கள். போன் பேசும் போது சோபாவில் உட்காராமல், வீட்டைச் சுற்றி நடந்து கொண்டே பேசுங்கள். லிஃப்ட்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
66
உடல் எடை குறைய ஸ்பெஷல் டிப்:
எடை குறைய வேண்டும் எனில், தினமும் 10,000 அடிகளோடு நில்லாமல், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் 'ஸ்ட்ரென்த் டிரெய்னிங்' (Strength Training) எனப்படும் எளிய தசைப் பயிற்சிகளையும் சேர்த்து செய்வது மெட்டபாலிசத்தை எகிற வைக்கும்!