30 வயதை கடந்தவர்கள் தினமும் தவறாமல் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்

Published : May 08, 2026, 05:16 PM IST

30 வயதைத் தொடுவது என்பது வாழ்வின் ஒரு அழகான மைல் கல். ஆனால், இந்த வயதில் உடல் மெல்ல மெல்ல மாறத் தொடங்கும். 20-களில் கவனிப்பாரற்று விட்ட ஆரோக்கியத்தை, 30-களில் கவனிக்கத் தவறினால் 40-களில் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.

PREV
17
"லிஃப்ட்" வேண்டாமே.. படிக்கட்டு இருக்கட்டும்!

30 வயதிற்குப் பிறகு எலும்புகளின் அடர்த்தி (Bone Density) குறையத் தொடங்கும். ஜிம்முக்குச் சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ லிஃப்ட்டைத் தவிர்த்து படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள். இது இயற்கையாகவே உங்கள் கால்களுக்குத் தேவையான பலத்தைத் தரும்.

27
புரதச்சத்துடன் கூடிய காலை உணவு

"காலை உணவுதானே அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஸ்கிப் செய்வது 30-களில் மிகப்பெரிய தவறு. இந்த வயதில் தசைகள் வலுவிழக்கத் தொடங்கும். எனவே, உங்கள் காலை உணவில் முட்டை, முளைகட்டிய பயறு அல்லது தயிர் போன்ற புரதம் (Protein) நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது தசை இழப்பைத் தடுக்கும்.

37
தூக்கத்திற்கு முன் ஒரு 'Screen-Free' நேரம்

ஸ்மார்ட்போன் வெளிச்சம் உங்கள் மெலடோனின் ஹார்மோனைப் பாதிக்கும். 30 வயதைக் கடந்தவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம் மிக அவசியம். தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் செல்போனைத் தள்ளி வைத்துவிட்டு, ஒரு புத்தகம் வாசியுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து இளமையைத் தக்கவைக்கும்.

47
'வைட்டமின் D' எனும் சூரிய ஒளி

இந்த வயதில் ஏற்படும் முதுகுவலி மற்றும் உடல் சோர்வுக்கு முக்கிய காரணம் வைட்டமின் D குறைபாடுதான். தினமும் காலை அல்லது மாலை 15 நிமிடங்கள் இளவெயிலில் நில்லுங்கள். இது இலவசமாகக் கிடைக்கும் மாமருந்து என்பதை மறக்காதீர்கள்!

57
அதிக தண்ணீர்.. குறைந்த காபி!

30-களில் சருமம் வறட்சியடைய ஆரம்பித்து சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். காபி அல்லது டீயை விட அதிகமாகத் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் சருமத்தை "ஹைட்ரேட்டடாக" (Hydrated) வைத்திருக்கலாம். இது ஆன்டி-ஏஜிங் (Anti-aging) க்ரீம்களை விட சிறப்பாக வேலை செய்யும்.

67
மருத்துவப் பரிசோதனை

"எனக்குத்தான் ஒன்னும் இல்லையே" என்ற மிதப்பு 30-களில் வேண்டாம். வருடம் ஒருமுறை அடிப்படை ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது, பின்னாளில் வரும் பெரிய பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்க உதவும். உங்கள் உடலோடு நீங்கள் பேசும் ஒரு வாய்ப்பு இது.

77
மனதுடன் கொஞ்சம் நேரம்

வேலை, குடும்பம், குழந்தை என 30-களில் ஓடிக்கொண்டே இருப்போம். உங்களுக்காக தினமும் ஒரு 10 நிமிடம் ஒதுக்குங்கள். அது தியானமாகவோ அல்லது உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்பதாகவோ இருக்கலாம். மன அமைதிதான் நீண்ட ஆயுளின் ரகசியம்!

Read more Photos on
click me!

Recommended Stories