Anti Aging Foods : 50 வயசிலும் இளமை.. இந்த உணவுகளை தினமும் சேர்த்துகிட்டா போதும்; முகத்துல வயசே தெரியாது

Published : Nov 26, 2025, 05:46 PM IST

50 வயதிலும் இளமையாக தெரிய கீழே குறிப்பிட்ட உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

PREV
16
Anti-Aging Foods Over 50

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதாது சருமமும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். சருமத்தை அழகாக்க பலரும் பல விதமான ஃபேஸ் பேக்குகள், மாஸ்குகள் போடுகின்றனர். ஆனால் அவற்றின் பலன்கள் குறைவு தான். மேலும் நீங்கள் எந்த வயதிலும் இளமையாகவும், அழகாகவும் தெரிய விரும்பினால் நீங்கள் சாப்பிடும் உணவில் முதலில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், 50 வயசிலும் உங்களது சருமம் அழகாகவும், பளிச்சென்று பொலிவாகவும் தெரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினமும் சாப்பிடுங்கள். இதனால் அழகாக இருப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

26
நட்ஸ்கள், விதைகள் :

வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி, பூசணி விதைகள், ஆளி விதைகள் போன்ற நட்ஸ்கள் மற்றும் விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் புரோட்டீன்கள் அதிகமாகவே உள்ளன. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவாக இருப்பது மட்டுமல்லாமல், இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

36
பழங்கள்

தினமும் ஏதாவது 2 வகையான பழங்களை சாப்பிடுங்கள். இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாகவது மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு போன்ற பழங்களில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. இவை சருமத்தை இளமையாகவும், அழகாகவும் வைக்கும்.

46
தானியங்கள்

சிறுதானியங்கள் மற்றும் முழு தானியங்களை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயின் அபாயம் குறைவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

56
கீரைகள் :

முருங்கைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரை வகைகளில் இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து ஆகியவை அதிகமாகவே உள்ளன. கீரையை தினமும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலிமையாகும், சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

66
தயிர், மோர் :

இவற்றில் புரோபயோடிக்குகள் அதிகமாக இருப்பதால் செரிமானத்தை மென்மையாக்கும், குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். செரிமானம் சிறப்பாக செயல்பட்டால் சரும பிரச்சனைகள் பாதி அளவு குறையும். எனவே தினமும் தயிர் அல்லது மோர் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories