Winter Skincare Tips : ஒரு பைசா செலவில்லாமல்..குளிர்காலத்தில் உங்க அழகை மெருகூட்ட இதை பாலோ பண்ண மறக்காதீங்க!

Published : Nov 25, 2025, 06:14 PM IST

குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், பளபளப்பாக வைத்திருப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
13
Winter Skincare Tips

நாளுக்கு நாள் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சீசனில் பருக்கள், வறண்ட சருமம் போன்ற பல சரும பிரச்சனைகளை சந்திப்போம். நீங்களும் குளிர்காலத்தில் இதே பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், விலை உயர்ந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சருமத்தை அழகாக மாற்றலாம். இந்த பதிவில் குளிர்காலத்தில் சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

23
குளிர்கால சரும பராமரிப்பு..

குளிர்காலத்தில் சருமம் வளர்ச்சி அடைவதை தடுக்கவும் முகப்பருவை குறைக்கவும் பொலிவான சருமத்தை பிறகும் இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி, அரை ஸ்பூன் வெந்தயத்தூள், சில துளிகள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். பிறகு மாய்ஸ்ரைசர் பயன்படுத்துங்கள்.

33
குளிர்காலத்தில் முகம் பளபளக்க..

குளிர்காலத்தில் முகம் பளபளக்க முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக் ஆக போடவும். வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தவும்.

அதுபோல குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதை தடுக்க சத்தான காய்கறிகள், பழங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மற்றும் சருமம் வறண்டு போவதை தடுத்து சருமத்தை பிரகாசமாக வைக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories