Savukku: என் பையன் அப்படி பண்ணல! குண்டர் சட்டத்தை ரத்து செய்யுங்கள்! கோர்ட் படியேறிய சவுக்கு சங்கரின் தாயார்!

First Published May 23, 2024, 6:54 AM IST

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

Savukku Shankar

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். 

Savukku Shankar Arrest

இவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கடந்த 12ம் தேதி உத்தரவிட்டார். அடுத்தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் திருச்சி, மதுரை, சென்னை என ஒவ்வொரு ஊராக நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க: Savukku : சவுக்கு சங்கரின் குழுவை இயக்கியதே அண்ணாமலை தான்.!! டிஜிபிக்கு பறந்த புகார் கடிதத்தால் பரபரப்பு

Chennai High Court

இந்நிலையில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எனது மகன் செயல்படவில்லை. காவல் துறையினர் தாக்கியதில் காயம் அடைந்த எனது மகனுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

Goondas Act

அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்து ஒவ்வொரு ஊராக அழைத்துச் சென்று ஆஜர்படுத்தி வருகிறார்கள். ஆகவே, எனது மகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

Latest Videos

click me!