பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. வேகமாக ஓடும் ஆற்றில் பாலத்தின் ஒரு பகுதி சாய்ந்து விழுவதை வீடியோவில் காண முடிகிறது. பாலத்தின் அருகே கரையில் ஒரு கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அவர்கள் இடிந்து விழுவதைப் பார்த்து வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
பீகார் மாநிலம் அராரியா என்ற இடத்தில் கட்டுமானப் பணி முடிவுறும் நிலையில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி திடரென இடிந்து விழுந்தது. பக்ரா ஆற்றின் குறுக்கே கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் சில நொடியில் சரிந்து விழுந்திருக்கிறது.
பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. வேகமாக ஓடும் ஆற்றில் பாலத்தின் ஒரு பகுதி சாய்ந்து விழுவதை வீடியோவில் காண முடிகிறது. பாலத்தின் அருகே கரையில் ஒரு கூட்டம் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். அவர்கள் இடிந்து விழுவதைப் பார்த்து வீடியோ எடுத்திருக்கிறார்கள்.
இந்த பாலம் சரிந்ததில் அப்பகுதியில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. வாகனப் போக்குவரத்து இன்னும் தொடங்காததால் அசம்பாவிதம் ஏதும் நிகழ்வில்லை.
A lot of people are sharing this video of a bridge collapse in Bihar, but no one is questioning Nitish Kumar.
Because no one is sure, which alliance he will be in tomorrow. pic.twitter.com/NkC8cM1zYr
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள குர்சகாந்தா மற்றும் சிக்தி இடையேயான பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டது. 12 கோடியில் கட்டப்பட்ட இப்பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து நாசமாகியிருக்கிறது.
இதுபற்றி சிக்தி எம்எல்ஏ விஜய் குமார் கூறுகையில், "கட்டுமான நிறுவன உரிமையாளரின் அலட்சியத்தால் பாலம் இடிந்து விழுந்துள்ளது. நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இடிந்து விழுந்த பகுதி சில நொடிகளில் அடித்து செல்லப்பட்டு, மக்கள் பாதுகாப்புக்கு ஓடத் தொடங்கினர். மற்றொரு வீடியோவில், மணமகளின் மீதமுள்ள பகுதியின் விளிம்பிற்கு அருகில் சிலர் ஆபத்தான முறையில் நிற்கிறார்கள். பலர் அதன் கீழ் நிற்கும்போது.
இடிந்து விழுந்த பாலத்தின் பெரும்பகுதி ஆற்றின் மேல் கட்டப்பட்டதுதான். ஆனால், பக்ரா நதிக்கரையில் கட்டப்பட்ட பகுதி அப்படியே உள்ளது.
பீகாரில் இவ்வாறு நடப்பது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு மார்ச் மாதம், பீகாரின் சுபாலில் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பலர் இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அடேங்கப்பா! ஒரு படத்துக்கே இவ்ளோவா! கங்கனா ரனாவத், ஆலியா பட்டை முந்திய தீபிகா படுகோன்!