மணிரத்னத்துக்கே மவுசு போச்சா? போன வருஷம் நம்பர் 1.. ஆனா இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சே! டாப் 5 டைரக்டர்ஸ் லிஸ்ட்

First Published Dec 20, 2023, 8:31 AM IST

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிரிபுதிரியான வெற்றிப்படங்களை கொடுத்து டாப் 5 இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் யார் என்பதை பார்க்கலாம்.

Top 5 Tamil Directors

2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு பொன்னான ஆண்டாகவே அமைந்துள்ளது. இதற்கு காரணம் இந்த ஆண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக அறிமுக இயக்குனர்களின் படங்களும் சக்கைப்போடு போட்டு உள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆதிக் ரவிச்சந்திரன்

டாப் 5 இயக்குனர்கள் லிஸ்ட்டில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளவர் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் இயக்கத்தில் இந்த ஆண்டு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இப்படம் அமோக வெற்றியை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்த வெற்றியின் மூலம் டாப் 5 இயக்குனர் லிஸ்ட்டிலும் இடம்பிடித்து உள்ளார் ஆதிக்.

எச்.வினோத்

இயக்குனர் எச்.வினோத்துக்கு இந்த பட்டியலில் நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவர் இயக்கத்தில் இந்த ஆண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, எச்.வினோத்துக்கு அடுத்ததாக கமல்ஹாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்று தந்தது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மணிரத்னம்

டாப் 5 இயக்குனர் லிஸ்ட்டில் இந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் சரிவை சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தின் மூலம் வசூல் சாதனை படைத்து முதலிடத்தை பெற்றிருந்த மணிரத்னத்துக்கு, இந்த ஆண்டு அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியும் மூன்றாவது இடமே கிடைத்துள்ளது. முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவிக்கவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம்.

லோகேஷ் கனகராஜ்

2023-ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் நடிகர் விஜய்யின் லியோவும் ஒன்று. இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் டாப் 5 இயக்குனர்கள் பட்டியலில் லோகிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

நெல்சன்

டாப் 5 இயக்குனர்கள் லிஸ்ட்டில் நம்பர் 1 இடத்தை தட்டிச் சென்றுள்ளவர் இயக்குனர் நெல்சன் தான். அவர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததோடு, அதிக வசூலை வாரிக்குவித்த கோலிவுட் படம் என்கிற சாதனையையும் படைத்தது. இப்படம் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... கோடீஸ்வரியாக வாழும் புன்னகை அரசி சினேகாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் இருக்கிறதா? அவரின் Net Worth விவரம் இதோ

click me!