ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.. 2023-ல் அதிக எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன படங்களின் லிஸ்ட் இதோ

First Published Dec 19, 2023, 9:43 AM IST

2023-ம் ஆண்டு அதீத எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி கடும் விமர்சனங்களை சந்தித்து அட்டர் பிளாப் ஆன படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Flop movies in 2023

2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பல எதிர்பாரா வெற்றிப்படங்களை கொடுத்து நம்பிக்கை அளித்ததோடு, விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பான் இந்தியா அளவில் சக்கைப்போடு போட்டன. இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகி மொக்கை வாங்கிய படங்களும் இருக்கின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆன திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மைக்கேல்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த திரைப்படம் தான் மைக்கேல். இதில் விஜய் சேதுபதி நடித்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் இப்படம் தோல்வியை சந்தித்தது.

அகிலன்

பொன்னியின் செல்வன் என்கிற பிரம்மாண்ட வெற்றிப்படத்துக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆன படம் தான் அகிலன். கடந்த பிப்ரவரி மாதம் இப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தை பூலோகம் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கி இருந்ததால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையெல்லாம் சுக்குநூறாக உடைத்து இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

கஸ்டடி

மாநாடு என்கிற மாபெரும் வெற்றிப்படத்துக்கு பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படம் தான் கஸ்டடி. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவானது. நாக சைதன்யா நாயகனாக நடித்த இப்படத்துக்கு யுவன் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்து இருந்தனர். அதீத எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன இப்படம் அட்டர் பிளாப் ஆனது.

ஆதிபுருஷ்

பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட படங்களில் நடித்துவரும் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆதிபுருஷ். இப்படம் கடந்த ஜூன் மாதம் ரிலீஸ் ஆனது. இப்படம் வெளிவந்தபோது தியேட்டரில் ஒரு இருக்கை ஹனுமனுக்காக ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் அறிவிப்பு வெளியானது. இப்படி பில்டப் கொடுத்தும் இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

chandramukhi 2

சந்திரமுகி 2

பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை 18 ஆண்டுகளுக்கு பின் வெளியிட்டனர். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதனால் இப்படத்திற்கு ஓவர் ஹைப் கொடுக்கப்பட்டது. ஆனால் படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது.

இறைவன்

ஜெயம் ரவியின் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெற்றிக்கு பின் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இறைவன். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தின் டிரைலர் பார்த்து சில்லரைகளை சிதறவிட்ட ரசிகர்கள், ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு எதிர்பார்த்தனர். ஆனால் தியேட்டரில்  படம் பார்க்க சென்றவர்களின் பொறுமையை சோதித்துவிட்டது இப்படம்.

கிக்

சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று சந்தானத்துக்கு கம்பேக் படமாக அமைந்தது. அப்படம் ரிலீஸான ஒரே மாதத்தில் திரைக்கு வந்த திரைப்படம் தான் கிக். இதனால் இப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் தவிடுபொடியாக்கி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கியது கிக்.

ஜப்பான்

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார், பொன்னியின் செல்வன் 2 என வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து பிளாக்பஸ்டர் நாயகனாக வலம் வந்தவர் கார்த்தி. அவரின் 25-வது படமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த திரைப்படம் தான் ஜப்பான். ஓவர் பில்டப்புடன் ரிலீஸ் ஆன இப்படம் அட்டர் பிளாப் ஆகி கார்த்தியின் கெரியரில் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... ஹனிமூன் கொண்டாட காதலர்களின் கனவு தேசத்துக்கு சென்ற ராதா மகள் கார்த்திகா நாயர் - வைரலாகும் போட்டோஸ்

click me!