யார் இந்த ஏக்நாத் ஷிண்டே? மகாராஷ்டிரா முதல்வரானாது எப்படி?

First Published Jun 30, 2022, 8:15 PM IST

உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸும், ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதை அடுத்து மகாராஷ்டிர புதிய முதல்வராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்தார். அதன்படி மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக்கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமானம் செய்து வைத்தார். யார் இந்த ஏக்நாத் ஷிண்டே? இவர் எப்படி மகாராஷ்டிரா முதல்வர் ஆனார்? 

ஏக்நாத் ஷிண்டேவின் குடும்பம்:

மகாராஷ்டிராவின் உத்தவ் அரசாங்கத்தை மண்டியிட வைத்த சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே இந்த நாட்களில் விவாதத்தில் உள்ளார். 41 சிவசேனா மற்றும் 9 சுயேச்சை எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே தற்போது கவுகாத்தியில் உள்ளார். சரத் ​​பவாரின் என்சிபி மற்றும் காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று ஷிண்டே விரும்புகிறார். இதனுடன், இந்துத்துவாவுக்காக எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஏக்நாத் ஷிண்டேவைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியும், ஆனால் அவருடைய குடும்பத்தைப் பற்றி சிலருக்குத் தான் தெரியும்.

ஆட்டோ ஓட்டுநர் ஏக்நாத் ஷிண்டே:

ஏக்நாத் ஷிண்டே 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சம்பாஜி நவ்லு ஷிண்டே. சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பம் சதாராவில் இருந்து மும்பைக்கு அருகிலுள்ள தானேவுக்கு குடிபெயர்ந்தது. ஆரம்ப காலத்தில் ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டி வந்தார். 

இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசியலில் ஏமாற்றமும் மாற்றமும் , கை ஓங்கிய ஏக்நாத் ஷிண்டே

ஷிண்டேவின் மகன் எம்பி; மனைவி தொழிலதிபர்:

ஏக்நாத் ஷிண்டே ஒரு தொழிலதிபரான லதா ஷிண்டேவை மணந்தார். இவர்களுக்கு ஸ்ரீகாந்த் ஷிண்டே என்ற மகன் உள்ளார். ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதி எம்.பி. அதனுடன், அவர் ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார். ஸ்ரீகாந்த் கல்வாவில் உள்ள சிவாஜி மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். ஸ்ரீகாந்த் 2016ல் விருஷாலி ஷிண்டேவை திருமணம் செய்து கொண்டார்.

ஷிண்டே இடிந்துபோன விஷயம்:

ஜூன் 2000 இல், ஏக்நாத் ஷிண்டே தனது 11 வயது மகன் திபேஷ் மற்றும் 7 வயது மகள் சுபதாவுடன் மும்பையிலிருந்து சதாராவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு படகு சவாரி செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் அவர்களது குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் ஏக்நாத் ஷிண்டே இடிந்துபோனார். 

ஷிண்டே அரசியலுக்கு வந்தது எப்படி?

ஏக்நாத் ஷிண்டே தானேவில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த வேளையில் ​​சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தன்னை சிவசேனாவில் இணைத்துக்கொண்டார். 1980களில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மற்றும் தானே மாவட்ட தலைவர் ஆனந்த் திகே ஆகியோருடன் ஒருமுறை தொடர்பு கொண்டார். ஆனந்த் திகே சிவசேனாவில் சேர அவருக்கு உதவினார். இவ்வாறாக அவரது அரசியல் பயணம் தொடங்கியது.

இதையும் படிங்க: துணை முதல்வராகிறாரா தேவேந்திர ஃபட்னாவிஸ்? பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுவது என்ன?

4 முறை எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார் ஷிண்டே:

ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், அவர் தானேவின் கோப்ரி பச்பகடி தொகுதியில் 2004 இல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். இதற்குப் பிறகு அவர் தானேவில் ஆதிக்கம் செலுத்தி தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றார். 2014ல், மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே:

சாதாரண ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையை தொடங்கிய ஏக்நாத் ஷிண்டே அரசியலில் படிபடியாக முன்னேறி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்று மகாராஷ்டிராவில் உத்தவ்  அரசாங்கத்தை கவிழ்த்து தற்போது மகாராஷ்டிராக பதவியேற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே… யார் இவர்?

click me!