Rathnam : கல்லாகட்டும் கில்லி... வசூலில் டல் அடிக்கும் விஷாலின் ரத்னம் - 3 நாட்களில் இவ்வளவு தான் கலெக்‌ஷனா?

First Published Apr 29, 2024, 9:48 AM IST

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன நிலையில், அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

Rathnam

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன மார்க் ஆண்டனி திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததோடு, தொடர் தோல்வியை சந்தித்து வந்த நடிகர் விஷாலுக்கு ஒரு தரமான கம்பேக் படமாகவும் அமைந்தது. மார்க் ஆண்டனி படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததால் அவர் நடிக்கும் அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. அந்த வகையில் மார்க் ஆண்டனி வெற்றிக்கு பின்னர் விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம்.

Rathnam Movie Collection

ரத்னம் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், இப்படம் ஹாட்ரிக் ஹிட் அடிக்குமா என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... பாண்டிச்சேரியில் வீக்-எண்டை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! தனது செல்லத்துடன் கொஞ்சி விளையாடும் க்யூட் கிளிக்ஸ் இதோ

Rathnam Movie Day 3 Box Office collection

ரத்னம் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.2.45 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் நாளில் ரூ.2.15 கோடி வசூலித்து இருந்தது. மூன்றாம் நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் இப்படம் வெறும் ரூ.2.15 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன்மூலம் மூன்று நாட்கள் முடிவில் ரத்னம் திரைப்படம் ரூ.6.75 கோடி வசூலித்து உள்ளது.

Ghilli Re Release

விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் முதல் நாளே ரூ.6.5 கோடி வசூலை வாரிக்குவித்து இருந்தது. ஆனால் ரத்னம் படம் அந்த வசூலை எட்டவே மூன்று நாள் ஆகி உள்ளது. ரத்னம் படம் வசூலில் டல் அடிப்பதற்கு விஜய்யின் கில்லி படமும் ஒரு காரணம். அப்படம் ரீ-ரிலீஸ் ஆகி இரண்டாவது வாரமாக சக்கைப்போடு போட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் கில்லி படம் இதுவரை உலகளவில் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு போட்டியாக புது குக்கிங் ஷோ... வெங்கடேஷ் பட் தலைமையில் சன் டிவிக்கு தாவிய குக் வித் கோமாளி டீம்

click me!