நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு நடந்த வளைகாப்பு! ஒன்று கூடிய சீரியல் பிரபலங்கள்!

First Published Mar 21, 2024, 1:54 PM IST

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.
 

நடிகர் தனுஷ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளியான 'புதுக்கோட்டையில் இருந்து சரவணன்' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஸ்ரீதேவி. இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் நடித்த இவர்... பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

இதை தொடேன்ற்து சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு, தங்கம், இளவரசி, கல்யாண பரிசு, நிலா போன்ற சீரியல்களில் நடித்தார் ஸ்ரீதேவி.

பர்சனல் வாழ்க்கையில் விழுந்த இடி! கேரியரை கோட்டை விட்ட.. வரலட்சுமி சரத்குமார்! அவரே கூறிய ஷாக் தகவல்!

சன் டிவி தொடர்கள் மட்டும் இன்றி, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மை நேம் இஸ் மங்கம்மா', பூவே, பூச்சூடவா', செம்பருத்தி போன்ற முக்கிய சீரியல்களில் நடித்தார்.

அதே போல் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'ராஜா ராணி', அரண்மனைக்கிளி, பொம்ம குட்டி அம்மாவுக்கு, போன்ற பல தொடர்களில் நடித்தார். தற்போது மோதலும் காதலும், பொன்னி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார்.

Amala Paul Photos: கர்ப்பமாக இருக்கும் அமலாபால் மடியில் தவழும் கியூட் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் சில சீரியல்களில் நடித்துள்ள ஸ்ரீதேவி, அசோகா சிண்டாலா என்பவரை கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு சித்தாரா 5 வயது பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவிக்கு அவருடைய கணவர் அசோக்... பிரமாண்டமாக வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். 

விஜய் - அஜித் மேரேஜ் லிஸ்டுலையே இல்ல! திருமணத்திற்கு அதிகம் செலவு செய்த 6 தென்னிந்திய நடிகர்கள் இவர்கள் தான்!

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு, ஸ்ரீதேவியை வாழ்த்தி உள்ளனர். தற்போது இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ரசிகர்களும், நடிகை ஸ்ரீதேவி அசோக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் இரண்டு முக்கிய சீரியல்களில் நடித்து வரும் நிலையில்... விரைவில் இந்த தொடர்களில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

24 கேரட் தங்க சிலை போல்... கோல்டன் நிற உடையில் மின்னும் 'தங்கலான்' நாயகி மாளவிகா மோகனன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

click me!