பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகியும் பாக்ஸ் ஆபிஸில் மரணஅடி வாங்கிய மெரி கிறிஸ்துமஸ்- முதல்நாள் வசூல் இவ்வளவுதானா?

First Published Jan 13, 2024, 9:25 AM IST

விஜய் சேதுபதி நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

merry christmas

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா அளவில் செம்ம பிசியான நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. இவர் கடந்த ஆண்டு வெளியான ஃபர்சி என்கிற வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து மும்பைக்கார் என்கிற படத்தில் நடித்த அவருக்கு ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. அட்லீ இயக்கத்தில் வெளியான அப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் மக்கள் செல்வன்.

Merry Christmas Day 1 collection

இதையடுத்து அவர் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்துள்ள முதல் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்தியில் அந்தாதூன் என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரில்லர் படமான இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடித்துள்ளார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி உள்ளது. அதுவும் பொங்கல் பண்டிகைக்கு அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்களுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... அயலானை விட டபுள் மடங்கு வசூல்... பொங்கல் ரேஸில் கெத்து காட்டிய கேப்டன் மில்லர் - முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

Katrina Kaif, Vijay Sethupathi

மெரி கிறிஸ்துமஸ் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகி இருந்தாலும் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.2.55 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இது அயலான் படத்தின் முதல் நாள் வசூலில் பாதி கூட இல்லை. இதனால் விஜய் சேதுபதியின் ஹீரோ மார்க்கெட் சரிந்துள்ளது இதன்மூலம் தெரியவருகிறது. இதனை விஜய் சேதுபதியே சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.

Makkal Selvan Vijay Sethupathi

அதில் தான் இனி வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறிய அவர், தன்னுடைய ஹீரோ மார்க்கெட் பாதிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார். அவர் சொன்னதுபோல் தற்போது அவர் ஹீரோவாக நடித்துள்ள படத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் அதில் மெரி கிறிஸ்துமஸ் கலெக்‌ஷன் பிக் அப் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பொங்கல் ரேஸில் ‘அயலான்’ அடிவாங்கியதா? அடிச்சு தூக்கியதா? - முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் இதோ

click me!