Nayanthara Photos: கலக்கலான பார்ட்டி வேர் அணிந்து கடற்கரையில் காதல் கணவர் விக்கியுடன் நயன்! வைரலாகும் போட்டோஸ்

First Published May 8, 2024, 12:01 AM IST

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், மேட்சிங் மேட்சிங் உடையில் கடற்கரையில் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

40 வயதை எட்ட உள்ள நயன்தாராவுக்கு.. வயசு ஏற ஏற இளமையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. திருமணத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்த போதிலும் அம்மணி பாலிவுட்டில் நடித்த 'ஜவான்' படம் மெஹா ஹிட் ஆனது. அதே போல் இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாஹிப் பால்கி விருதையும் பெற்றார் நயன்தாரா.

இந்த படத்தை தொடர்ந்து, ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. எனவே தன்னுடைய சம்பளத்தையும் 6 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. 

தமிழில் நயன்தாரா தற்போது மல்டி ஸ்டார் படமாக உருவாகி வரும்  'தி டெஸ்ட்' மற்றும் யோகி பாபு உடன் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து, இன்று மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்கும் 'தி ஸ்டுடென்ட்' என்கிற படத்தின் பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு ஆசிரியை வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிட மறப்பதில்லை. அந்த வகையில் பீச்சில் பார்ட்டி வேர் அணிந்து காதல் கணவர் விக்கி மற்றும் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!