விஜய், ரஜினி படங்களை மிஞ்சிய 'விடாமுயற்சி' விற்பனை! வெயிட்டான தொகைக்கு முடிக்கப்பட்ட டீல்... வெளியான அப்டேட்!

First Published Apr 10, 2024, 12:42 PM IST

தல அஜித் நடித்து வரும், 'விடாமுயற்சி' படம் குறித்த... லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் 62-ஆவது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என, அதிகார பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டு உறுதி செய்த நிலையில், பல மாதங்கள் ஆகியும் இப்படம் தொடங்கப்படாமல் தள்ளி சென்று கொண்டே இருந்தது.

அஜித்தும் துணிவு படத்தின் ரிலீசுக்கு பின், பைக் ரேசிங்கில் கவனம் செலுத்த துவங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கும், லைகா நிறுவனத்திற்கும் திருப்தி இல்லாத காரணத்தால், அவரை இந்த படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு வேறு ஒரு இயக்குனரை வைத்து அஜித்தின் 62-ஆவது படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

திருமணமான இரண்டே வருடத்தில் மகாலட்சுமியை விவாகரத்து செய்கிறாரா ரவீந்தர்? சோகமான பதிவுக்கு அவரே கூறிய பதில்!
 

அதன் படி, இயக்குனர் மகிழ் திருமேனி கூறிய கதை அஜித்துக்கு பிடித்திருந்த நிலையில்... 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கியது. இப்படம் துவங்கியதில் இருந்து, படப்பிடிப்பு வெளிநாட்டில் தான் படமாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா... அஜித்தின் கார் சேசிங் காட்சியில் டூப் போடாமல் நடித்த வீடியோ ஒன்றை பகிர்ந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஏன், இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்கிறீர்கள் என அக்கறையோடு கேள்வி எழுப்பி வந்தனர்.

மேலும் தற்போது அஜித்தின் ரசிகர்கள்... இப்படம் குறித்து அப்டேட் கேட்டுவரும் நிலையில், தற்போது இப்படம் குறித்த அப்டேட் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. அதன்படி,  படத்தின் கர்நாடக திரையரங்கு உரிமை விஜய், ரஜினி, படங்களை விட பல மடங்கு அதிகமான தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Gayathrie: கோலிவுட் மியா காலிஃபா இவங்க தான் போலயே..! லோ அங்கிள் கவர்ச்சியில்.. உச்சம் தொட்ட காயத்ரி ஷங்கர்!

ajith

அதே போல் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. எனவே இந்த வருட தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளியாக அமைய உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புக்காக, அடுத்த வாரம் மீண்டும் படக்குழுவினர் வெளிநாடு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!