VidaaMuyarchi : தேர்தல் முடிஞ்சதும் ஷூட்டிங் துவங்கும்.. விடாமுயற்சி ரிலீஸ் எப்போது? பிரபலம் பகிர்ந்த தகவல்!

First Published Apr 4, 2024, 7:38 PM IST

Thala Ajith : பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. அஜர்பைஜான் நாட்டில் இப்பட பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

thunivu

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் வெளியான "துணிவு" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் பிரபல நடிகர் அஜித்குமார். அதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாக துவங்கியது. முதலில் அந்த படத்தை பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த விஜய் டிவி புது தொடர்! ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சன் டிவி

Vidaamuyarchi

ஆனால் அதன் பிறகு அந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பல மாதங்களாக அப்படம் குறித்த எந்தவிதமான தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் "விடாமுயற்சி" திரைப்படம் முழு வேகத்தில் ஆரம்பித்தது. அசர்பைஜான் நாட்டில் அப்பட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Thala Ajith kumar

இந்நிலையில் நடிகர் அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா அளித்த தகவலின்படி, வருகின்ற அக்டோபர் மாதத்தில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்றும். இப்பொது ஏறத்தாழ 60% பட பணிகள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி தேர்தல் முடிந்த அடுத்த நாள், மீண்டும் அசர்பைஜான் நாட்டிற்கு அஜித் புறப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனிரூத் அவர்களும் தனது பணிகளை விரைவாக முடித்து வருவதாக அவர் கூறினார்.

Siddharth : வேற லெவலில் ஹிட்டான பாடல்.. வைப் செய்து மகிழ்ந்த செலிபிரிட்டி ஜோடி - வைரலாகும் Through Back Video!

click me!