பாதியில் நின்ற திருமணம்; பாகுபலி நடிகருடன் லவ் பிரேக் அப்; 40 வயதுக்கு மேலாகியும் திருமணமாகாத இந்த நடிகை யார்?

First Published May 24, 2024, 9:35 AM IST

கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த 40 வயது திருமணமாகாத நடிகையின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகிறது.

Trisha childhood Photos

பிரசாந்த் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் லேசா லேசா, இருப்பினும் அப்படம் வெளியாக தாமதம் ஆனதால் அமீர் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் திரிஷாவுக்கு அறிமுக படமாக அமைந்தது. 

Trisha rare Photos

கடந்த 2002-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. பின்னர் விக்ரம் ஜோடியாக சாமி, விஜய் ஜோடியாக கில்லி, அஜித்துடன் ஜீ என தொடர்ந்து டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் திரிஷா. 

Trisha unseen Photos

அதுமட்டுமின்றி சினிமாவில் அறிமுகமாகி ரஜினியுடன் இணைந்து நடிக்க முடியவில்லை என்று ஏங்கி வந்த திரிஷாவுக்கு அந்த ஆசை பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியது. அப்படத்தில் முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் திரிஷா. அதேபோல் கமலுடன் இணைந்து நடிக்காமல் இருந்த அவர், தக் லைஃப் படம் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

Trisha Rare childhood Photos

40 வயதுக்கு மேலாகியும் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து உள்ளார். இவரும் தயாரிப்பாளர் வருண் மணியனும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. 

இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி படத்தில் இணையும் 3வது ஹீரோயின்... அஜித்துக்கு ஜோடியாக நடிக்க உள்ள அந்த நடிகை யார் தெரியுமா?

Trisha old Photos

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததால், இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிட்டனர். இதையடுத்து பாகுபலி பட நடிகர் ராணா டகுபதி உடனும் காதல் கிசுகிசுவில் சிக்கினார் திரிஷா. இவர்கள் இருவரும் ஜோடியாக பல்வேறு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Trisha Krishnan

ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் நாளடைவில் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். திரிஷா உடனான பிரேக் அப்பிற்கு பின் மஹிகா பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகர் ராணா.

trisha unseen clicks

இப்படி 41 வயதிலும் முரட்டு சிங்கிள் நடிகையாக வலம் வரும் திரிஷா, இன்றளவும் இளமை குறையாமல் இருப்பதால் அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Trisha with her Father

இந்த நிலையில், அவரின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் இணையத்தில், வெளியாகி படு வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களில் நடிகை திரிஷா செம்ம க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Sridevi : படம் நடிச்சு பல வருஷமாச்சு.. ஆனாலும் யங் நாயகி போல அழகில் அசத்தும் ஸ்ரீதேவி விஜயகுமார் - Photos!

Latest Videos

click me!