திருமணத்திற்கு முன்பே டேட்டிங்.. அவுட்டிங் என காதலருடன் ஊர் சுற்றும் வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!

First Published May 10, 2024, 3:35 PM IST

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய காதலர் நிக்கோலாய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே டேட்டிங், அவுட்டிங் என விடுமுறையை ஜமாய்த்து வருகிறார். இதுகுறித்த போட்டோஸ் இதோ..
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும் அறியப்படும் சரத்குமாரின் மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். படிக்கும் காலத்தில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தபோதும், அதனை தவற விட்ட வரு, ஒருவழியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான 'போடா போடி' படத்தில் கதாநாயகியாக தன்னுடைய சினிமா கேரியருக்கு பிள்ளையார் சுழி போட்டார்.
 

விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டை பெற்றாலும்... வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. எனினும் தன்னுடைய முதல் படத்திலேயே, சிறந்த நடிகை என்பதையும் தன்னுடைய நடன திறமையையும் நிரூபித்தார் வரலட்சுமி.

Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!
 

தமிழில் நடிக்க தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க துவங்கினார். பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில், 'தாரை தப்பட்டை' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்தி நடித்திருந்தார் வரு.
 

ஹீரோயினாக இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்காத நிலையில், அதிரடியாக வெயிட்டான குணச்சித்திர ரோல்களிலும், தளபதிக்கே வில்லியாக 'சர்க்கார்' படத்தில் நடித்து ஆச்சர்யப்படுத்தினார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை என்கிற பெயரை எடுத்துள்ள வரலட்சுமி விஷாலை சில வருடங்கள் காதலித்து வந்த நிலையில், பின்னர் அவரிடம் இருந்து பிரேக் அப் செய்து பிரிந்தார்.

Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?
 

காதல் முறிவுக்கு பின்னர் திருமணம் என்கிற பேச்சை மீடியாக்கள் எடுத்தாலே ஓட்டம் பிடித்து வந்த வரு, சமீபத்தில் தன்னுடைய 14 வருட நண்பரான, நிக்கோலாய் என்பவருக்கும் வரலட்சுமிக்கும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. 
 

இந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இதுவரை திருமண தேதி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் தன்னுடைய காதலருடன் தொடர்ந்து டேட்டிங் செய்து வரும் வரு, தற்போது பிளைட்டில் காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

டாப் 10 TRP-யில் இடம்பிடித்த புது சீரியல்! டல் அடித்த விஜய் டிவி சீரியல் ரேட்டிங்.. டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்!

நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவருக்கு 15 வயதில் மகள் ஒருவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்த போதும், நிக்கோலாய் தோற்றம் குறித்து விமர்சனம் எழுந்த போதும்... பக்கா பதிலடியால் நெட்டிசன்களை வரலட்சுமி வாயடைக்க செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!