சக்சஸ் ஆன மிஷன்... ரசிகர்களுடன் வந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அருண் விஜய்..!

First Published Feb 12, 2024, 2:29 PM IST

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று ரசிகர்களுடன் சாமி தரிசனம் செய்துள்ளார் அருண் விஜய்.

arun vijay

நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், தமிழ் சினிமாவில் கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த முறைமாப்பிள்ளை படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் சுமார் 20 ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதும் கைகொடுக்கவில்லை. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் அருண் விஜய்யின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக விக்டர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் அருண் விஜய்.

arun vijay takes selfie with fans

இதையடுத்து மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அவருக்கு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது. பின்னர் மாஃபியா, யானை போன்ற படங்களில் நடித்து வெற்றிகண்ட அருண் விஜய், கடைசியாக மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்... போட்டியின்றி சிங்கம் போல் சிங்கிளாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர் 1’ - ரிலீஸ் தேதி இதோ

Mission hero arun vijay

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் ரசிகர்களுக்கு ஆக்‌ஷன் விருந்தாக அமைந்தது. பொங்கலுக்கு வெளியான படங்களில் மிஷன் படத்துக்கு தான் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

arun vijay visit Tiruchendur temple

மிஷன் திரைப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ள அருண் விஜய், தற்போது தன்னுடைய ரசிகர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அருண் விஜய்யை பார்த்ததும் அவருடன் வந்து ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

arun vijay at tiruchendur

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வணங்கான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பாலா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் வெற்றியடைய வேண்டியும் திருச்செந்தூர் முருகனிடம் பிரார்த்தனை செய்துள்ளார் அருண் விஜய். வணங்கான் படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... என்னை அறிந்தால் வெற்றிக்கு பின்.. அருண் விஜய்யுடன் சேர்ந்து ஆக்ஷன் காட்சியில் மெர்சல் செய்த ஸ்டண்ட் சில்வா!

click me!