உலக நாயகனின் இந்தியன் 2.. சங்கர் போட்ட பக்கா பிளான் - அந்த மாஸ் ஹீரோ நச்சுனு ஒரு கேமியோ பண்ணப்போறாராம்?

First Published Oct 16, 2023, 9:52 PM IST

Kamalhaasan Indian 2 : தமிழ் சினிமாவில் ஏறத்தாழ 63 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணியாற்றி, இன்று உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் திரு. கமல்ஹாசன். தமிழ் சினிமா என்பதை தாண்டி, இந்திய சினிமாவின் பெருமையாக திகழ்கிறார் அவர் என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

Indian movie

தனது இளமை பருவத்திலேயே, கமல்ஹாசன் நடிக்காத மொழிகள் இந்தியாவில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார் கமல்ஹாசன். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குனர் சங்கர் அவருடைய இயக்கத்தில் இந்தியன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்த இரு வெவ்வேறு கதாபாத்திரங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 

Navarathri: விதவிதமான சேலையில்.. நவராத்திரி கொண்டாட்டத்தை களைகட்ட வைத்த அனிதா விஜயகுமார்! வைரலாகும் போட்டோஸ்!

Shankar

இந்நிலையில் சுமார் 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2. படம் அறிவிக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு என்றாலும் இப்படத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டு என்பது  குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்று தொடங்கி இன்று வரை பெருந்தொற்றும் பல மரணங்களும் இந்தியன் 2 திரைப்படம் உருவாகுவதை தொடர்ச்சியாக தடுத்து வந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Ram Charan

தற்பொழுது இந்தியன் 2 படம் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை அண்மையில் துவங்கினார் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு மாஸ் ஹீரோ கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தான் ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்துவரும் ராம் சரண். ஆனால் இன்றளவும் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

உங்க ஏரியா எது? 'லியோ' படத்திற்கு கூடுதல் கட்டணமா இந்த எண்ணுக்கு ஒரு போன் போடுங்க.. அதிகாரிகள் அறிவிப்பு!

click me!