விமானத்தில் பறந்த பழங்குடியினர்… ஈஷாவுக்கு நன்றி… நெகிழ்ச்சி தருணம்!!

First Published Jul 21, 2022, 5:52 PM IST

ஈஷா மையம் ஆதரவுடன் அதன் அருகே பணிபுரியும் பழங்குடியினர் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்ததை அடுத்து விமானத்தில் பறக்கும் முதல் தலைமுறை என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். 

விமானத்தில் பறந்த முதல் தலைமுறை:

கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள 41 பழங்குடியினர் இன்று கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக விமானத்தில் பறந்தனர். ஈஷா மைய ஆதரவுடன், மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோயில் பதியாண்ட் தாணிகண்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர், விமானத்தில் பறந்த முதல் தலைமுறையினர் என்ற பெருமை பெற்றனர். 

பேனர், சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு:

முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் பழங்குடியினருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ், சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்றது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்து பெரிய பேனர் ஏந்தி பழங்குடியினர் வரவேற்க்கப்பட்டனர். அதேபோல் சென்னைக்கு அழைத்துச் செல்லும் விமானத்தில், பயணம் செய்தவர்களுக்கு சிறப்பு சிற்றுண்டி மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன. 

விமானத்தில் பறந்த பழங்குடியினர்:

இதுக்குறித்து ஈஷா மையம் அருகே தேங்காய் விற்கும் மடக்காடு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான வெள்ளச்சியம்மா, டிவி மற்றும் திரைப்படங்களில் மட்டுமே விமானங்களைப் பார்த்திருக்கிறோம். எனவே இப்போது ஒரு விமானத்தில் பறப்பது எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் என்று கூறினார். முன்னதாக கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் புறப்பட்டபோது, அவரது உற்சாகத்துக்கு எல்லையே இல்லை.

இதேபோல், மடக்காடு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியினரான மூர்த்தி கூறுகையில், எனது மனைவி விமானத்தில் பறக்க விரும்பினார். ஈஷா மையத்தில் இருந்து ஒரு சுவாமி சென்னைக்கு ஒரு குழு விமானத்தை ஒருங்கிணைப்பதாக எங்களிடம் கூறினார். அன்றுமுதல் நான் தினமும் அவரிடம் அதுக்குறித்து கேட்டு வந்தேன். இறுதியாக நாங்கள் விமானத்தில் பறந்துவிட்டோம். என் மனைவியின் கனவு நனவாகியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று புன்னகையுடன் கூறுகிறார். 

நன்றி தெரிவித்த இண்டிகோ ஏர்லைன்ஸ்:

இண்டிகோ விமானத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி என்று இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த விமான பயணத்திற்கு பின் பேசிய பழங்குடியினரில் ஒருவரான தானிகண்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்ய குமார், இது ஆரம்பம் மட்டுமே. ஆதியோகி ஒவ்வொரு ஆண்டும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும். அடுத்த ஆண்டு, 100 கிராமவாசிகள் விமானத்தில் ஏறுவார்கள். இது அனைவரின் விருப்பப் பட்டியலிலும் உள்ளது என்றார்.  

click me!