விஜய் டிவிக்கு போட்டியாக புது குக்கிங் ஷோ... வெங்கடேஷ் பட் தலைமையில் சன் டிவிக்கு தாவிய குக் வித் கோமாளி டீம்

First Published Apr 29, 2024, 8:28 AM IST

விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்கிற பெயரில் புது குக்கிங் ஷோ ஆரம்பமாக உள்ளது.

Bharath, venkatesh bhatt

விஜய் டிவியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியான இது முதல் சீசனிலேயே வேறலெவல் ஹிட் அடித்தது. காமெடி கலந்த கலகலப்பான குக்கிங் நிகழ்ச்சி என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு தூணாக திகழ்ந்து வந்தது அதன் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான். அவர்கள் காம்போவுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

top cooku dupe cooku show

வெற்றிகரமாக நான்கு சீசன்கள் அதே டீம் உடன் பயணித்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த ஆண்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. ஏனெனில் அந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது. அதேபோல் அந்நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணி, அந்நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் அடுத்தடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படியுங்கள்... 9 படம் தோல்வி.. பாலிவுட் நெப்போட்டிசம்.. தற்போது பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி இந்த நடிகை..

sun TV cooking show

இருப்பினும் புத்தம் புது டீம் உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த வாரம் கோலாகலமாக தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கெடுத்து உள்ளார். இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் புது குக்கிங் ஷோ ஒன்று விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என பெயரிட்டு உள்ளனர்.

top cooku dupe cooku GP Muthu

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த நான்கு சீசன்களை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் தான் சன் டிவியில் இந்நிகழ்ச்சியை தயாரித்து வருகிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த மோனிஷா, ஜிபி முத்து, தீபா, பரத் ஆகியோருடன் நடுவர் வெங்கடேஷ் பட்டும் சன் டிவி குக்கிங் ஷோவுக்கு தாவி இருக்கிறார். இந்நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியாகி உள்ள நிலையில், அதில் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... Coolie : கூலி டீசர்.. சர்ச்சையான வெங்கட் பிரபுவின் பதிவு.. ரஜினியை கலாய்த்தாரா VP? அவரே கொடுத்த விளக்கம்!

click me!