நாகை டூ இலங்கைக்கு நாளை முதல் கப்பல் சேவை.. ஆசையாக காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த கப்பல் நிறுவனம்

By Ajmal Khan  |  First Published May 12, 2024, 11:56 AM IST


கடலில் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாகையில் இருந்து இலங்கைக்கு நாளை முதல் கப்பல் சேவை தொடங்க இருந்த நிலையில், திடீரென கப்பல் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 


இலங்கை டூ நாகை

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்பது தமிழக மற்றும் இலங்கை தமிழர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு, இதனை பூர்த்தி செய்யும் வகையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து  கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற பெயரில் கப்பல் இயக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

 நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் கட்டணமும் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து சேவையை சரியாக இயக்கமுடியாத நிலை உருவானது. குறைவான பயணிகளை மட்டுமே வைத்துக்கொண்டு இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து ஏற்பட்ட புயல் மற்றும் கடும் மழை காரணமாக போக்குரவத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

முன்பதிவு தொடங்கியது

இதனையடுத்து பல கட்ட முயற்சிக்கு பிறகு மீண்டும் இலங்கைக்கு கப்பலை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் படி மே 13ஆம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிவகங்கை என்ற பெயர் கொண்ட வேறொரு கப்பல் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு செல்ல உள்ளதாகவும் இதற்கான முன்பதிவும் தொடங்கியது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள கப்பலில் கீழ் தளத்தில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டது. இந்த கப்பலில்  கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க ஜிஎஸ்டி வரியுடன் 7000 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. 

ஏமாற்றம் அடைந்த பயணிகள்

இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானதாகும். கோடை விடுமுறையையொட்டி அதிகளவில் பயணிகள் கப்பல் பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே அந்தமானில் தயாராகியுள்ள சிவகங்கை கப்பல் மே10 ஆம் தேதி நாகை துறைமுகம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை.

இதனையடுத்து நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து ரத்து வரும் 17ஆம் தேதிக்கு கப்பல் போக்குவரத்து சேவே தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்த பயணிகள் பயண தேதியை மாற்றிக் கொள்ளலாம் அல்லது கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் பயணத்தை நம்பி இலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் இயக்கம்.!! எப்போது தெரியுமா.?... டிக்கெட் கட்டணம் எவ்வளவு.?

click me!