அதிமுகவில் பிளவை உண்டாக்கும் வேலையை நாங்கள் பார்க்க மாட்டோம்! அதை பாஜக பார்த்துப்பாங்க! ஒரே போடாக போட்ட ரகுபதி

By vinoth kumar  |  First Published May 12, 2024, 11:36 AM IST

எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும் அப்போதுதான் சரியான எதிர்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமாக விமர்சனங்களை அவர் இறங்குகின்ற போது அவரது பதவிக்கு ஆபத்து வந்துவிடும். அதனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல.


அதிமுக கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம் பாஜக செய்யும்‌ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் திமுக மருத்துவர் அணி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை சட்டத்துறை திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: பிரதமர் மோடியின் பிரச்சாரம் ஒன்றே போதும் பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் ஆத்திரத்தோடும் இந்தியா கூட்டணியின் மீது வெறுப்பை உருவாக்குகின்ற வகையில் அவர் பேசுகின்ற பேச்சு பாஜக ஆட்சியை இழந்து விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு. உதாரணத்திற்கு குஜராத்தில் கூட பத்து இடங்களை கூட பாஜக வெற்றி பெறுவது அரிதான ஒன்று என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

பாஜக கூட்டணி கட்சியில் தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை இந்தியா கூட்டணி நிச்சயம் எடுக்கும். சவுக்கு சங்கர் வீட்டில் காவல்துறையினர் சென்றபோது உரிய சாட்சிகளுடன் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதே தவிர பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு கிடையாது. 

சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அழைப்புகள் தரப்படுகிறது, தகுதி அடிப்படையில் மதிப்பன் அடிப்படையில் அவை வழங்கப்படுகிறது. எல்லா பிரிவுகளும் அங்கு இருக்கிறது. புதிய பாடப் பிரிவுகள் தேவைப்பட்டால் அதனை பரிசளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மிகப்பெரிய வெற்றி பெற்று மூன்று ஆண்டுகள் சாதனையுடன் நிறைவேற்றி உள்ளோம் அதற்குரிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் 40க்கு 40க்கு வெற்றி இந்த ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசாக அமையும். 

எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்ற வேண்டும் அப்போதுதான் சரியான எதிர்கட்சியாக இருக்கும். அதை விட்டுவிட்டு வேறு விதமாக விமர்சனங்களை அவர் இறங்குகின்ற போது அவரது பதவிக்கு ஆபத்து வந்துவிடும். அதனால் அவரது பிறந்தநாளில் அவரது பதவிக்கு ஆபத்து என்று சொல்வது அழகல்ல. யாராக இருந்தாலும் பல நாள் வாழ வேண்டும் அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அதனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்லாண்டு காலம் வாழ திமுக மனசாட்சியுடன் எப்போதும் வாழ்த்தும். நாங்கள் யாரையும் தூதுபவர்கள் கிடையாது. தேர்தலுக்குப் பிறகு என்னென்ன வருகிறது என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும். 

இதையும் படிங்க:  Sengottaiyan : அதிமுகவில் உட்கட்சி மோதலால் பாஜகவில் இணைகிறேனா.?? செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். ஆனால் ஏற்கனவே ஜெயக்குமார் கூட எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் அதற்கு செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம் பாஜக செய்யும்‌ என அமைச்சர் ரகுபதி கூறினார். 

click me!